மேட்டூர் அணையை அருகில்  சென்று பார்வையிட அனுமதி

மேட்டூர் அணையின் உபரிநீர் மதகு அருகில் சென்று பார்க்க பொதுமக்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

மேட்டூர் அணையின் உபரிநீர் மதகு அருகில் சென்று பார்க்க பொதுமக்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
மேட்டூர் அணை கட்டப்பட்டபோது அணையின் இடது கரையில் 16 மதகுகளை கொண்டு உபரிநீர் போக்கி அமைக்கப்பட்டது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 120 அடியாக இருக்கும் போது கூடுதலாக வரும் உபரிநீரை நொடிக்கு 3,56,429 கனஅடி வரை இந்த மதகுகள் மூலம் வெளியேற்ற முடியும். உபரிநீர் போக்கி மதகுகள் மீது போக்குவரத்துக்கு அனுமதிக்கப்பட்டிருந்தது. அணை வலுவிழந்துவிடும் எனக்கருதி கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு போக்குவரத்து நிறுத்தப்பட்டது. பாதசாரிகள் இலகு ரக வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டது. மேட்டூர் அணையின் 16 கண் பாலம் அருகே தங்கமாபுரிபட்டினத்தையும் சேலம் கேம்பையும் இணைத்து சுமார் ரூ.22 கோடி செலவில் புதிய பாலம் அமைக்கப்பட்ட பிறகு பாதசாரிகள் செல்லவும் தடை செய்யப்பட்டு மூடப்பட்டது. 
 தற்போது மேட்டூர் அணை நிரம்பியதும் அதனை பார்க்க நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். பலதரப்பினரும் உபரிநீர் போக்கி அருகே சென்று பார்க்க அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இந்த நிலையில் வெள்ளிக்கிழமை பிற்பகல் முதல் அணையின் வெள்ளக் கட்டுப்பாட்டு அறை உள்ள பகுதியில் ஒவ்வொரு முறையும் 100 நபர்களை அனுமதித்து வருகின்றனர். 15 நிமிடங்களுக்கு பிறகு அவர்களை வெறியேற்றி விட்டு அடுத்து 100 நபர்களை அனுமதிக்கின்றனர். இதனால் பொதுமக்களும் சுற்றுலாப் பயணிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com