சோனா தொழில்நுட்பக் கல்லூரியில் புத்தாக்கப் பயிற்சி

சேலத்தில் உள்ள சோனா தொழில்நுட்பக் கல்லூரியில் உள்ள தகவல் தொழில்நுட்பம் மற்றும் சிவில் இன்ஜினீயரிங் துறை சார்பில் ஒரு வார கால புத்தாக்கப் பயிற்சி நடைபெற்றது.  

சேலத்தில் உள்ள சோனா தொழில்நுட்பக் கல்லூரியில் உள்ள தகவல் தொழில்நுட்பம் மற்றும் சிவில் இன்ஜினீயரிங் துறை சார்பில் ஒரு வார கால புத்தாக்கப் பயிற்சி நடைபெற்றது.  
இன்ட்ரடொக்ஷன் டூ அவுட்கம் பேஸ்ட் இன்ஸ்ட்ரக்ஷனல் மெத்தட்ஸ்" என்ற தலைப்பில் இந்தப் புத்தாக்கப் பயிற்சி நடைபெற்றது.  ஏ.ஐ.சி.டி.இ-ஐ.எஸ்.டி.இ. யுடன்இணைந்து சோனா தொழில்நுட்பக் கல்லூரி நடத்தியது. இப் பயிற்சியில், கடந்த இருபது ஆண்டுகளில் இத் துறையில் ஏற்பட்டுள்ள மறுமலர்ச்சி குறித்தும், அதனால் மாணவர்கள் அடைந்த பயன்கள் குறித்தும்  மஹேந்திரா கல்விக் குழுமத்தின் இயக்குநரான ஆர்.சாம்சன் ரவீந்திரன் பேசினார். 
இந்தப் புத்தாக்கப் பயிற்சியின் மூலம் சேலம் மற்றும் சேலம் நகரைச் சுற்றியுள்ள பல்வேறு கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த சுமார் 40 பேர் பயனடைந்தனர். இப் பயிற்சியின்போது, பாடத் திட்டம் தயாரிப்பதற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. அதுபோல, பல்வேறு போதனை முறைகள் குறித்தும் விளக்கப்பட்டது.
பல்வேறு கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த பல்வேறு துறைகளிலும் சிறந்து விளங்கும் கருத்தாளர்கள் பங்கேற்று பயிற்சி அளித்தனர். கல்வி, ஆலோசனை, திட்டமிடல், தரமான பாடத் திட்டத்தைத் தயாரித்தல் குறித்து இந்தப் பயிற்சியில் விளக்கப்பட்டது. 
பயிற்சியில் பங்கேற்றோருக்கு சேலம், தியாகராஜர் பாலிடெக்னிக் கல்லூரியின் முதல்வர் வி.கார்த்திகேயன் சான்றிதழ்களை வழங்கினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com