சேலம்-திருப்பதி விமான சேவை இயக்க பரிசீலனை: ட்ரூஜெட் விமான நிறுவன அலுவலர் தகவல் 

சேலத்தில் இருந்து திருப்பதிக்கு விமானம் இயக்க பரிசீலிக்கப்பட்டு வருகிறது என ட்ரூஜெட் நிறுவனத்தின் வர்த்தகப் பிரிவு அலுவலர் செந்தில்ராஜா தெரிவித்தார். 
சேலம்-திருப்பதி விமான சேவை இயக்க பரிசீலனை: ட்ரூஜெட் விமான நிறுவன அலுவலர் தகவல் 

சேலத்தில் இருந்து திருப்பதிக்கு விமானம் இயக்க பரிசீலிக்கப்பட்டு வருகிறது என ட்ரூஜெட் நிறுவனத்தின் வர்த்தகப் பிரிவு அலுவலர் செந்தில்ராஜா தெரிவித்தார்.
 இது தொடர்பாக ட்ரூஜெட் வர்த்தக பிரிவு அலுவலர் செந்தில்ராஜா செய்தியாளர்களிடம் கூறியது: சேலம் விமான நிலையத்தில் வரும் மார்ச் 25-ஆம் தேதி முதல் விமான சேவை தொடங்குகிறது.
 தொடக்க விழாவில் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி, மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், தமிழக சட்டப்பேரவைத் தலைவர் பி.தனபால், அமைச்சர்கள் பி.தங்கமணி, எம்.சி.சம்பத், கே.பி.அன்பழகன், வி.சரோஜா ஆகியோர் பங்கேற்கின்றனர்.
 மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் சுரேஷ் பிரபு காணொலிக் காட்சி மூலம் விமான சேவை தொடக்க விழாவில் பங்கேற்கிறார். மாவட்ட ஆட்சியர் ரோகிணி ராம்தாஸ், எம்.பி, எம்.எல்.ஏ-க்கள் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.
 விமான சேவை தொடக்க விழாவில் உதான் திட்டத்தின் கொள்கையின்படி வறுமை கோட்டின் கீழ் உள்ள குடும்பத்தை சேர்ந்த மாணவி மற்றும் ஒரு மாணவருக்கு சேலத்திலிருந்து சென்னைக்கு சென்று அடுத்த நாள் சேலம் திரும்பி வர ட்ரூஜெட் நிறுவனத்தினர் இலவச பயண சீட்டுகளை வழங்க உள்ளனர். மேலும், அவர்கள் இருவரும் விமான நிலையத்தில் தங்கவும் போதிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
 சென்னையில் இருந்து தினந்தோறும் காலை 9.50 மணிக்கு கிளம்பும் விமானம் காலை 10.40 மணிக்கு சேலம் வந்தடையும். பிறகு காலை 11 மணிக்கு கிளம்பி சென்னை காலை 11.50 மணிக்கு சென்றடையும். பின்னர் அங்கிருந்து கடப்பா சென்று இறுதியாக ஹைதராபாத் செல்கிறது.
 இந்த கால அட்டவணையை மாற்றி சென்னையில் காலை 7 மணிக்கு கிளம்பி சேலத்துக்கு 7.50 மணிக்கு வந்தடைய வேண்டும். சேலத்தில் இருந்து 8.20 மணிக்கு புறப்பட்டு காலை 9.10 மணிக்கு சென்னை அடைய வேண்டும்.
 ட்ரூஜெட் விமானத்தில் மொத்தம் 72 இருக்கைகளில் 36 இருக்கைகள் உதான் திட்டத்தின் கீழ் ஒதுக்கப்படும். மீதமுள்ள இருக்கைகள் பொது இருக்கைகளாக இருக்கும். அந்த வகையில் சேலத்தில் இருந்து சென்னை செல்ல ஒரு வழி கட்டணமாக ரூ.1,499 செலுத்த வேண்டும். பின்னர் சென்னையில் இருந்து கடப்பா செல்ல ரூ.499-ம், கடப்பாவில் இருந்து ஹைதராபாத் செல்ல ரூ.1,499-ம் செலுத்த வேண்டும்.
 ட்ரூஜெட் 7 விமானங்களை வாங்க உள்ளது. மேலும், சேலத்தில் இருந்து இந்தியாவின் முக்கிய நகரங்களுக்கு விமான இணைப்பு தர முடியும். சேலம் }திருப்பதி வழி தடத்துக்கு விரைவில் விமான சேவையை தொடங்க இருக்கிறோம். முதல் 3 மாதங்களுக்கு சலுகைக் கட்டணமாக ரூ.1,499 மட்டுமே ஒருவழி பயணத்துக்கு வசூலிக்கப்படும். அதன் பிறகு ரூ.1,810 முதல் ரூ.2,000 வரை மட்டுமே விமான கட்டணம் வசூலிக்கப்படும் என்றார்.
 பேட்டியின் போது இந்திய தொழில் வர்த்தக சபை பிரிவு தலைவர் பொறியாளர் மாரியப்பன், நிர்வாகிகள் ரமேஷ்குமார், சேலம் உற்பத்தி திறன் குழு தலைவர் ராமநாதன், பாஜக நிர்வாகி முருகேசன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com