சேலம் மாவட்டத்தில் 1.78 லட்சம் பேருக்கு மடிக்கணினி வழங்கல்

சேலம் மாவட்டத்தில் ரூ.220.82 கோடியில் 1,78,528 பள்ளி மாணவ, மாணவியருக்கு விலையில்லா மடிக்கணினிகள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சேலம் மாவட்டத்தில் ரூ.220.82 கோடியில் 1,78,528 பள்ளி மாணவ, மாணவியருக்கு விலையில்லா மடிக்கணினிகள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சேலம் மாவட்டத்தில் விலையில்லா மடிக்கணினி வழங்கும் திட்டத்தின் மூலம் மாணவ, மாணவியர் சமுதாயத்தில் தரமான கல்வியைப் பெற்று கல்வியில் அறிவு சார்ந்தவர்களாக திகழ்கின்றனர். மேலும் பெருமளவில் பயன்பெற்றுள்ளனர்.  
விலையில்லா மடிக்கணினி வழங்கும் சிறப்பான திட்டத்தை பயன்படுத்தி மடிக்கணினியின் மூலம் சிறந்த பாடத் திட்டங்களையும், பொது அறிவு புத்தகங்களையும் பதிவிறக்கம் செய்து சேமித்து வைத்து தொடர்ந்து படித்து பயன்பெறுவதோடு, பெற்றோர்களின் கனவையும், எதிர்கால லட்சியத்தையும் நிறைவேற்றிட பாடுபட வேண்டும். 
தமிழக அரசு கல்வி வளர்ச்சிக்கென ஒவ்வொரு பருவத்திலும் மாணவர்களின் தேவைகளை அறிந்து உதவி செய்து வருகிறது. மேலும், கல்வித் துறையின் மூலம் வழங்கப்படும் அனைத்து திட்டங்களும் இம்மாவட்டத்தில் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.
தமிழக அரசின் சிறப்பு திட்டங்களில் ஒன்றான விலையில்லா மடிக்கணினி வழங்கும் திட்டத்தின் கீழ் சேலம் மாவட்டத்தில் 2011-12-ஆம் ஆண்டில் தலா ரூ.12,370 மதிப்புள்ள விலையில்லா மடிக்கணினிகள்  24,408 மாணவ, மாணவியருக்கு ரூ.30.19 கோடியிலும், 2012-13-ஆம் ஆண்டில் 24,889 மாணவ, மாணவியருக்கு ரூ.30.78 கோடியிலும், 2013-14-ஆம் ஆண்டில் 26,004 மாணவ, மாணவியருக்கு ரூ.32.17 கோடியிலும், 2014-15-ஆம் ஆண்டில் 26,595 மாணவ, மாணவியருக்கு ரூ.32.90 கோடியிலும், 2015-16-ஆம் ஆண்டில் 25,281 மாணவ, மாணவியருக்கு ரூ.31.27 கோடியிலும், 2016-17-ஆம் ஆண்டில் 25,664 மாணவ, மாணவியருக்கு ரூ.31.74 கோடியிலும், 2017-18-நடப்பாண்டில் 25,687 மாணவ, மாணவியருக்கு ரூ.31.77 கோடியிலும் என இதுவரை 2011 முதல் 2018 வரை ரூ.220.82 கோடியில் 1,78,528 மாணவ, மாணவியருக்கு மடிக் கணினிகள் வழங்கப்பட்டுள்ளன என ஆட்சியர் ரோகிணி ராம்தாஸ் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com