விமான நிலைய விரிவாக்க விவகாரம்: சீமான் உள்பட 10 பேர் மீது வழக்கு

விமான நிலைய விரிவாக்க விவகாரம் தொடர்பாக சீமான் உள்பட 10 பேர் மீது செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

விமான நிலைய விரிவாக்க விவகாரம் தொடர்பாக சீமான் உள்பட 10 பேர் மீது செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஒமலூர் அருகே உள்ள பொட்டிபுரம் கிராமத்தில் நாம் தமிழர் கட்சியின் பொதுக் கூட்டம் கடந்த சனிக்கிழமை நடைபெற்றது.  இந்த கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்துகொண்டு பேசினார்.
அப்போது, எந்தச் சூழ்நிலையிலும் விமான நிலைய விரிவாக்கப் பணிக்கு விளைநிலங்களைக் கொடுக்க மாட்டோம். அரசு அதை எடுக்க முயற்சி செய்தால், எனது தலைமையில் ஆங்காங்கே குடிசைகள் அமைத்து போராட்டம் நடத்துவோம் என்றார்.
அதே போல்,  பியூஷ் சேத்தியா தலைமையில் விமான நிலைய விரிவாக்கத்துக்கு நிலம் எடுப்பதைக் கண்டித்து நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய சீமான் உள்ளிட்டோர், நிலம் எடுக்க வருவோருக்கு கொலை மிரட்டல் விடுத்தனராம்.
இதையடுத்து,  சீமான், பியூஷ் சேத்தியா உள்பட 10 பேர் மீது பொட்டிபுரம் கிராம நிர்வாக அலுவலர் நடராஜன் ஓமலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.  அதன் பேரில்,  சீமான், பியூஷ் சேத்தியா மற்றும் உள்ளூர் கிராமங்களைச் சேர்ந்த 8 பேர் உள்பட 10 பேர் மீது 143, 188, 506(1) ஆகிய பிரிவுகளின் கீழ் ஓமலூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com