நட்டுவம்பாளையம் அரசுமேல்நிலைப் பள்ளி 98 சதவிகிதம் தேர்ச்சி

சங்ககிரி அருகே உள்ள நட்டுவம்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளி பிளஸ் 2 பொதுத் தேர்வில் 98 சதவிகிதம் தேர்ச்சி அடைந்துள்ளது.

சங்ககிரி அருகே உள்ள நட்டுவம்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளி பிளஸ் 2 பொதுத் தேர்வில் 98 சதவிகிதம் தேர்ச்சி அடைந்துள்ளது.
இப்பள்ளியில் மாணவ, மாணவிகள் 55 பேர் தேர்வு எழுதினர். இதில் 54 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். வணிகவியல் பிரிவு மாணவி 1,086 மதிப்பெண்கள் பெற்று முதலிடத்தையும், அதே துறையைச் சேர்ந்த மாணவர் 1,066 மதிப்பெண்கள் பெற்று 2-ஆவது இடத்தையும், கணக்குப் பதிவியல் பிரிவு மாணவி 1,030 மதிப்பெண்கள் பெற்று 3-ஆவது இடத்தில் தேர்ச்சி பெற்றுள்ளார். தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகளை பள்ளித் தலைமையாசிரியை சுமதி, பெற்றோர் -ஆசிரியர் கழகத்தலைவர் நீதிமோகன், பிடிஏ நிர்வாகிகள் மற்றும் ஆசிரியர், ஆசிரியைகள் உள்ளிட்ட பலர் வாழ்த்துத் தெரிவித்தனர்.
சங்ககிரி மாதிரிப் பள்ளி
96 சதவிகிதம் தேர்ச்சி
சங்ககிரி மாதிரிப் பள்ளியில் தேர்வு எழுதிய 54 பள்ளி மாணவ, மாணவிகளில் 52 பேர் தேர்ச்சி பெற்று, பள்ளி 96 சதவிகிதம் தேர்ச்சி பெற்றுள்ளது. மூன்று மாணவிகள் 952, 914, 880 மதிப்பெண்கள் பெற்று பள்ளியளவில் முதல் மூன்று இடங்களைப் பெற்றுள்ளனர். வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளை தலைமையாசிரியர், பிடிஏ தலைவர் மற்றும் நிர்வாகிகள் பாராட்டினர்.
தேவூர் அரசு மேல்நிலைப்பள்ளி 71 சதவிகிதம் தேர்ச்சி
சங்ககிரி அருகேயுள்ள தேவூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் தேர்வு எழுதிய 144 மாணவ, மாணவிகளில் 101 பேர் தேர்ச்சி பெற்று, 71 சதவிகிதம் பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவர்கள் 1010, 1008, 1007 என மதிப்பெண்கள் பெற்று பள்ளியளவில் முதல் மூன்று இடங்களைப் பெற்றுள்ளனர். வெற்றி பெற்ற மாணவர்களை தலைமையாசிரியர் தமிழ்ச்செல்வன், பெற்றோர்- ஆசிரியர் கழகத் தலைவர் குருசாமி, பிடிஏ நிர்வாகிகள் மற்றும் ஆசிரியர், ஆசிரியைகள் உள்ளிட்ட பலர் பாராட்டினர்.
அம்மம்பாளையம் சரஸ்வதி மெட்ரிக் பள்ளி சிறப்பிடம்
ஆத்தூர், மே 16: அம்மம்பாளையம் சரஸ்வதி மெட்ரிக் பள்ளி மாணவி பிளஸ் 2 பொதுத்தேர்வில் 1,185 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.
அவரை பள்ளி முதல்வர் மற்றும் நிர்வாகிகள் பரிசு வழங்கி பாராட்டினர். இப் பள்ளியில் பிளஸ் 2 தேர்வு எழுதிய அனைத்து மாணவ, மாணவிகளும் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com