மாற்றுத் திறனாளிகளுக்கு சிறப்பு மனுநீதி முகாம்: நலத்திட்ட உதவிகள் கோரி 465 பேர் மனு

சேலம் மாவட்டம், வாழப்பாடியில் புதன்கிழமை நடைபெற்ற மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு மனு நீதி முகாமில், பல்வேறு நலத் திட்ட உதவிகள் கோரி, 465 பேர் மனு அளித்தனர். மனுக்களை பரிசீலித்து,

சேலம் மாவட்டம், வாழப்பாடியில் புதன்கிழமை நடைபெற்ற மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு மனு நீதி முகாமில், பல்வேறு நலத் திட்ட உதவிகள் கோரி, 465 பேர் மனு அளித்தனர். மனுக்களை பரிசீலித்து, மூன்று சக்கர சைக்கிள், சக்கர நாற்காலி உள்ளிட்ட நலத் திட்ட உதவிகள் 20 பயனாளிகளுக்கு வழங்கப்பட்டன.
சேலம் மாவட்டத்தில், வருவாய்த் துறை, சமூக நலத் துறை, மாற்றுத் திறனாளிகள் மறுவாழ்வுத் துறை, கூட்டுறவுத் துறை, பொது சுகாதாரம் உள்ளிட்ட அனைத்துத் துறைகளும் ஒருங்கிணைந்து, சேலம், ஆத்துôர், மேட்டூர், சங்ககிரி ஆகிய 4 வருவாய் கோட்டங்களிலும், மாற்றுத் திறனாளிகளுக்கு சிறப்பு மனுநீதி முகாம்களை நடத்திட ஆட்சியர் ரோகிணி ராம்தாஸ் உத்தரவிட்டார்.
சேலம் வருவாய் கோட்டம சார்பில் வாழப்பாடியில், கோட்டாட்சியர் குமரேஸ்வரன் தலைமையில், சிறப்பு மனுநீதித் திட்ட முகாம் புதன்கிழமை நடைபெற்றது. இந்த முகாமில், மாதாந்திர உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு நலத் திட்ட உதவிகள் வழங்கக் கோரி, 465 பேர் மனு அளித்தனர்.
அந்த மனுக்களை, மாவட்ட மறுவாழ்வுத் துறை அலுவலர் வாழப்பாடி வட்டாட்சியர் பொன்னுசாமி, சமூகப் பாதுகாப்புத் திட்ட தனி வட்டாட்சியர் தமிழ்முல்லை ஆகியோர் முகாம் வளாகத்திலேயே பரிசீலனை செய்தனர். இதையடுத்து தகுதி வாய்ந்த 5 பேருக்கு மூன்று சக்கர சைக்கிள், 10 பேருக்கு சக்கர நாற்காலி, ஒருவருக்கு பிரெய்லி கடிகாரம், தலா இருவருக்கு சி.பி. இருக்கை, ஊன்றுகோல் உள்பட 20 பயனாளிகளுக்கு உடனடியாக நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. சிறப்பு முகாமில், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தல் விண்ணப்பங்களும், மாற்றுத் திறனாளிகளைப் பரிசோதனை செய்து தேசிய அடையாள அட்டைகளும் வழங்கப்பட்டன. சுய தொழில் செய்ய விரும்பும் மாற்றுத் திறனாளிகளுக்கு கடனுதவி வழங்கிட, தாட்கோ, கூட்டுறவு வங்கி பணியாளர்களும் பங்கேற்றனர். முகாமிற்கான ஏற்பாடுகளை, துணை வட்டாட்சியர்கள், பாலாஜி, ஜெயந்தி, வெங்கடேசன், வருவாய் ஆய்வாளர்கள் மனோகரன், மாதேஸ்வரன், ஆதிலட்சுமி, சரஸ்வதி, அகிலன் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் செய்திருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com