18 ஆண்டுகளாக மூடப்பட்டுள்ள கோயிலை திறக்கக் கோரி ஆர்ப்பாட்டம்

ஓமலூர் அருகே 18 ஆண்டுகளாக மூடப்பட்டுள்ள மாரியம்மன் கோயிலைத் திறக்கக் கோரி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஓமலூர் அருகே 18 ஆண்டுகளாக மூடப்பட்டுள்ள மாரியம்மன் கோயிலைத் திறக்கக் கோரி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
காடையாம்பட்டி வட்டாரத்தில் பொம்மியம்பட்டி கிராமம் உள்ளது. இந்தக் கிராமத்தில் பல்வேறு சமூகத்தைச் சேர்ந்த 500 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்தக் கிராமத்தின் மத்தியில் பழமையான மாரியம்மன் கோயில் உள்ளது.
இந்தக் கோயில் திருவிழா கிராம மக்களால் வருடா வருடம் நடத்துவது வழக்கம். இந்த நிலையில், கோயில் விழாவில் முதல் மரியாதை செலுத்துவது மற்றும் முதலில் பொங்கல் வைப்பது என்பன உள்ளிட்ட பிரச்னைகள் இருவேறு சமூகங்களுக்கு இடையே நிலவி வந்தது.
இதைத் தொடர்ந்து இந்தக் கோயில் பராமரிப்பு மற்றும் விழா நடத்துவதை இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது.
ஆனால், இருவேறு சமூகங்களுக்கு இடையே ஏற்பட்ட பிரச்னை காரணமாகக் கடந்த 18 ஆண்டுகளாக கோயில் மூடப்பட்டுள்ளது. ஏதாவது காரணங்களைக் கூறி இதுவரை கோயிலைத் திறக்காமல் காலம் தாழ்த்தி வருவதாகவும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் அதிகாரிகள் மீது குற்றம்சாட்டினர்.
இந்த நிலையில், அதிகாரிகளின் இந்தச் செயலைக் கண்டித்து விடுதலைச் சிறுத்தை கட்சியின் ஒன்றியச் செயலாளர் வேல்பாண்டியன் தலைமையில் மாரியம்மன் கோயிலைத் திறக்க வலியுறுத்தி அக்கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
காடையாம்பட்டி வட்டாட்சியர் அலுவலகம் முன்  நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்டச் செயலாளர் வசந்த் உள்ளிட்டோர் கலந்து கொண்டு அதிகாரிகளைக் கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். உடனடியாகக் கோயிலைத் திறக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com