500 விநாயகர் சிலைகள் கரைப்பு

விநாயகர் சதுர்த்திக்காக  அமைக்கப்பட்ட 500 விநாயகர் சிலைகள் மேட்டூர் காவிரியில் கடந்த இரு நாள்களாக விசர்ஜனம் செய்யப்பட்டன. 

விநாயகர் சதுர்த்திக்காக  அமைக்கப்பட்ட 500 விநாயகர் சிலைகள் மேட்டூர் காவிரியில் கடந்த இரு நாள்களாக விசர்ஜனம் செய்யப்பட்டன. 
சேலம், ஓமலூர், தீவட்டிப்பட்டி, சிந்தாமணியூர், மேச்சேரி, தாரமங்கலம், ஜலகண்டபுரம், நங்கவள்ளி, மேட்டூர், கொளத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் வீடுகளிலும், பொது இடங்களிலும் ஆயிரகணக்கான சிலைகள் வைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. 
இந்தச் சிலைகள்  கொளத்தூரில் பண்ணவாடி பரிசல்துறையிலும், மேட்டூரில் காவேரிபாலம் பகுதியிலும், கருமலைக்கூடல் காவல் நிலைய எல்லையில் திப்பம்படிட் காவிரிகரையிலும், மேச்சேரி காவல் நிலைய பகுதியில் கூணான்டியூர் காவிரிகரையிலும் சிலைகள் விசர்ஜனம் செய்யப்பட்டன.  வியாழன்,  வெள்ளிக்கிழமைகளில் இப்பகுதிகளில் 500 சிலைகள் விசர்ஜனம் செய்யப்பட்டனர். மேட்டூர் காவல் துணை கண்காணிப்பாளர் சவுந்திரராஜன் தலைமையில் போலீஸார் பாதுகாப்பு ப்பணிகளை மேற்கொண்டுள்ளனர். சிலைகள் விஜர்சனம் செய்யும் இடத்தில் தீயனைப்பு மற்றும் மீட்புப் படையினர் பரிசலில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
தம்மம்பட்டியில் நாளை... தம்மம்பட்டியில் ஞாயிற்றுக்கிழமை (செப்.16)  விநாயகர் சிலைகளின் விசர்ஜன ஊர்வலம் நடைபெறுகிறது. ஊர்வலத்தையொட்டி 43 சிலைகளை அமைத்த குழுவினருடனான அவசர ஆலோசனைக்கூட்டம் தம்மம்பட்டி காவல்நிலையத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், ஆய்வாளர் விஜயகுமார் பேசியது:- சிலைகள் வழக்கமாகக் கரைக்கப்படும் ஜங்மசமுத்திரம் தடுப்பணையில் நீர் இல்லாததால், அங்கு ,லாரி,டிராக்டர்களில் நீர் நிரப்பி அதன் பிறகு அதில் விநாயகர் சிலைகளை கரைக்கப்படவேண்டும். பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நடைபெறும் விழா அமைதியாக நடைபெற முழு ஒத்துழைப்பு தரவேண்டும் என்றார்.
அன்னதானம்... விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, ஆத்தூர் இராணிப்பேட்டை செல்வ விநாயகர் கோயிலில்  சிறப்பு பொது அன்னதானம் வழங்கப்பட்டது.
இராணிப்பேட்டை நண்பர்கள் குழு சார்பில் நடைபெற்ற வெள்ளிக்கிழமை பிற்பகல் முதல் மாலை வரை நடைபெற்ற அன்னதானத்தை அமமுக மாவட்டச் செயலர் எஸ்.கே.செல்வம் தொடங்கிவைத்தார். மாநில மருத்துவர் அணி செயலர் எஸ்.கே.கணேஷ்,  நகரச் செயலர் என்.ராஜேந்திரகுமார்,  மாவட்ட பேரவை செயலர் காட்டுராஜா (எ) பழனிசாமி, முன்னாள் எம்எல்ஏ எஸ்.மாதேஸ்வரன், ஒன்றியச் செயலர் கணேசன்,  மாவட்ட ஊராட்சிக் குழு முன்னாள் தலைவர் க.சண்முகம், ஜி.விக்ரமாதித்தன், ஜி.சக்திவேல், எஸ்.செந்தில், பி.ராஜா, ஏ.செந்தாமரை, கே.பி.ராமையா, இளங்கோ மன்னன், ராகுல்ஜீ, மணிகண்டன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com