பழனி பங்குனி உத்திர திருவிழா இன்று நிறைவு

பழனி பங்குனி உத்திரத் திருவிழாவை புதன்கிழமை திருக்கொடி இறக்கத்துடன் நிறைவு பெறவுள்ளது.

பழனி பங்குனி உத்திரத் திருவிழாவை புதன்கிழமை திருக்கொடி இறக்கத்துடன் நிறைவு பெறவுள்ளது.
பழனி பங்குனி உத்திரத் திருவிழா திருஆவினன்குடி திருக்கோயிலில் கடந்த ஏப்ரல் மாதம் 3 ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.  பத்து நாள் திருவிழாவை முன்னிட்டு விழா நாள்களில் அருள்மிகு வள்ளி தெய்வானை சமேதர் முத்துக்குமாரசாமி வெள்ளி காமதேனு, வெள்ளி ஆட்டுக்கிடா,  தங்கக்குதிரை உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் கிரிவீதி உலா எழுந்தருளினார். கடந்த சனிக்கிழமை திருக்கல்யாணம் மற்றும் வெள்ளித் தேரோட்டமும், ஞாயிற்றுக்கிழமை பங்குனி உத்திரத் திருத்தேரோட்டமும் நடைபெற்றன. இவ்விழாவை முன்னிட்டு அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமிக்கு கொடுமுடியில் இருந்து தீர்த்தக்காவடி எடுத்து வரும் பக்தர்கள் கூட்டம் குறைவின்றி வந்த வண்ணம் உள்ளது.
செவ்வாய்க்கிழமை சேலத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பறவைக்காவடி எடுத்து வந்து கிரி வீதி சுற்றி நேர்த்திக்கடன் செலுத்தினர். இரவு அருள்மிகு முத்துக்குமாரசாமி தம்பதி சமேதராக வெள்ளிப்பிடாரி மயில் வாகனத்தில் கிரிவீதி உலா எழுந்தருளினார். புதன்கிழமை இரவு திருக்கொடி இறக்கப்பட்டு விழா நிறைவு பெறுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com