கன்னியாகுமரியில் மீட்புப் பணி: திண்டுக்கல்லிலிருந்து 130 பேர் பயணம்

ஒக்கி புயலால் பாதிக்கப்ட்டுள்ள கன்னியாகுமரி மாவட்டத்தில் நிவாரணப் பணிகளை மேற்கொள்வதற்காக திண்டுக்கல் மாவட்டத்திலிருந்து

ஒக்கி புயலால் பாதிக்கப்ட்டுள்ள கன்னியாகுமரி மாவட்டத்தில் நிவாரணப் பணிகளை மேற்கொள்வதற்காக திண்டுக்கல் மாவட்டத்திலிருந்து பல்வேறு துறைகளைச் சேர்ந்த 130 பேர் செவ்வாய்க்கிழமை புறப்பட்டுச் சென்றனர். 
 ஒக்கி புயலால் பாதிக்கப்பட்டுள்ள கன்னியாகுமரி மாவட்டத்தில், பேரிடர் மீட்புப் பணிகளை மேற்கொள்வதற்காக  திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகள் சார்பில் அம்மைநாயக்கனூர் பேரூராட்சி செயல் அலுவலர் செல்வராஜ் தலைமையில் உதவி பொறியாளர், மேற்பார்வையாளர்கள், துப்புரவு ஆய்வாளர்கள், துப்புரவு பணி மேற்பார்வையாளர், ஓட்டுநர், பிட்டர் என மொத்தம் 33 பேர் கொண்ட குழுவினர் திங்கள்கிழமை புறப்பட்டுச் சென்றனர்.
 இந்நிலையில், நிவாரணப்பணிகள் மேலும் நீடித்து வருவதால்  கன்னிவாடி பேரூராட்சி செயல் அலுவலர் விஜயநாத் தலைமையில்  36 பேர் கொண்ட பேரிடர் மீட்புக் குழுவினரும், வனத்துறை சார்பில் 24 பேர் கொண்ட குழு, தேசிய நெடுஞ்சாலைத்துறை சேர்ந்த 32 பேர் கொண்ட குழு, பொதுப்பணித் துறை சார்பில் 5 பேர் கொண்ட குழு என மொத்தம் 130 பேர் தேவையான உபகரணங்களுடன்  நிவாரணப் பணிகளை மேற்கொள்ள புறப்பட்டுச் சென்றனர்.
 நிவாரணப் பணிகளை மேற்கொள்ளவதற்காக சென்ற அலுவலர்கள் மற்றும் பணியாளர்களை மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் செவ்வாய்க்கிழமை வழியனுப்பி வைத்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com