கொடைக்கானலில் பூத்துக் குலுங்கும் சிலுவைப் பூக்கள்

கிறிஸ்துமஸ் விழாவை வரவேற்கும் விதமாக கொடைக்கானலில் பல்வேறு இடங்களில் சிலுவைப் பூக்கள் பூத்துக் குலுங்குவதை சுற்றுலாப் பயணிகள் பார்த்து ரசித்து வருகின்றனர்.

கிறிஸ்துமஸ் விழாவை வரவேற்கும் விதமாக கொடைக்கானலில் பல்வேறு இடங்களில் சிலுவைப் பூக்கள் பூத்துக் குலுங்குவதை சுற்றுலாப் பயணிகள் பார்த்து ரசித்து வருகின்றனர்.
கொடைக்கானல் பகுதிகளில் பல்வேறு விதமான பூக்கள் பூத்துக் குலுங்குகின்றன. இதில் ஒரு சில பூக்கள் மட்டும் சீசன் காலத்திலும் குறிப்பிட்டவை பருவ காலங்களிலும் பூக்கின்றன. இந்நிலையில் கொடைக்கானல் பகுதிகளில் கிறிஸ்துமஸ் விழாவை வரவேற்கும் விதமாக சிலுவைப் பூக்கள் தற்போது பூத்துக் குலுங்குகின்றன. இந்தப் பூவானது நவம்பர், டிசம்பர், ஜனவரி ஆகிய மாதங்களில் மட்டுமே பூக்கக் கூடியது.
தற்போது கொடைக்கானல் பிரையண்ட் பூங்கா, செட்டியார் பூங்கா, பெர்ன்ஹில்சாலை, வட்டக்கானல் பகுதி, அப்சர்வேட்டரி, செல்லபுரம், செயிண்ட்மேரீஸ் சாலையிலுள்ள புனித சலேத் அன்னை ஆலய வளாகம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இப்பூக்கள் பூத்துள்ளன. 
இவை மஞ்சள் மற்றும் இளம் சிவப்பு நிறத்தில் காணப்படுகின்றன. மலரின் மொட்டுகள் சிலுவைப் போன்றத் தோற்றத்தில்  இருப்பதால்  இதற்கு சிலுவைப் பூக்கள் என பெயர். இந்தப் பூக்களை கொடைக்கானல் வரும் சுற்றுலாப் பயணிகள் பார்த்து ரசித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com