ஒட்டன்சத்திரத்தில் ரூ.159 கோடி செலவில்  புறவழிச்சாலை அமைக்கும் பணி பூமி பூஜையுடன் தொடக்கம்

ஒட்டன்சத்திரத்தில் ரூ.159 கோடி செலவில் புறவழிச்சாலை அமைக்கும் பணிக்கு வியாழக்கிழமை  பூமி பூஜை நடைபெற்றது.

ஒட்டன்சத்திரத்தில் ரூ.159 கோடி செலவில் புறவழிச்சாலை அமைக்கும் பணிக்கு வியாழக்கிழமை  பூமி பூஜை நடைபெற்றது.
   ஒட்டன்சத்திரம் நகரில் நிலவும் கடுமையான போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த ஒட்டன்சத்திரம் வழியாகச் செல்லும் தேசிய நெடுஞ்சாலை 209-இல் புறவழிச்சாலை அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் ஒட்டன்சத்திரம் சட்டப்பேரவை உறுப்பினர் அர.சக்கரபாணியிடம் கோரிக்கை வைத்தனர். 
அவர் கடந்த 2009-ஆம் ஆண்டு மத்திய கப்பல் மற்றும் தரைவழிப்போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த டி.ஆர்.பாலுவிடம் பொதுமக்களின் கோரிக்கையை எடுத்துக் கூறினார். அதன் பேரில் 2009-ம் ஆண்டு ஒட்டன்சத்திரத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலை 209-இல் புறவழிச்சாலை அமைக்க மத்திய அரசு அனுமதி வழங்கியது.   
  இதில் முதற்கட்டமாக நிலம் கையகப்படுத்தும் பணிக்கு ரூ.16.65 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. லெக்கையன் கோட்டை, அத்திக்கோம்பை,காளாஞ்சிபட்டி,கொல்லப்பட்டி,ஒட்டன்சத்திரம் நகரம்,அரசப்பிள்ளைபட்டி வழியாக சுமார் 10.1 கிலோ மீட்டர் தூரம் வரை உள்ள நிலங்கள் கையகப்படுத்தப்பட்டன.  2011-ஆம் ஆண்டு நிலத்தின் மதிப்பு உயர்ந்ததால் நிலம் கையகப்படுத்தும் பணியில் தொய்வு ஏற்பட்டது.  அதன் பிறகு மறுமதிப்பீடு தயார் செய்யப்பட்டு, 2015-ஆம் ஆண்டு மேலும் ரூ.28 கோடி நிலம் கையகப்படுத்தும் பணிக்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் முடிவடைந்தன. இத்திட்டத்தில்      ஒட்டன்சத்திரம்-வேடசந்தூர் சாலையில் ஒரு மேம்பாலம்,ஒட்டன்சத்திரம்-தாராபுரம் சாலையில் ஒரு மேம்பாலம் மற்றும் சாலைப்புதூர் அருகே ஒரு ரயில்வே மேம்பாலம், அரசப்பபிள்ளைபட்டி அருகே ஒரு மேம்பாலம் என மொத்தம் 4 மேம்பாலங்கள் கொண்ட 4 நான்கு வழிச்சாலை அமைக்க மத்திய தரைவழி போக்குவரத்து துறையினர் திட்டம் தயார் செய்தனர்.  
 அதன்படி சுமார் 10.1 கிலோ மீட்டர் தூரம் நான்கு வழிச்சாலை அமைக்க ரூ.159 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. 
 அதற்கான பூமிபூஜை வியாழக்கிழமை லெக்கையன்கோட்டை கிராமத்தில் நடைபெற்றது. இதில் தேசிய நெடுஞ்சாலை கோவை மண்டல திட்ட இயக்குநர் சிவக்குமார்,திட்ட இயக்குநர் (தொழில்நுட்பம்) உதயசங்கர், ஒட்டன்சத்திரம் தேசிய நெடுஞ்சாலைப்பிரிவு வட்டாட்சியர் பழனிச்சாமி உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com