கொடைக்கானலில் கூடுதல் போலீஸார் நியமனம்

கொடைக்கானலில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை பாதுகாக்க கூடுதல் போலீஸார் நியமிக்கப்பட்டுள்ளதாக, மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளர் சக்திவேல் தெரிவித்தார்.

கொடைக்கானலில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை பாதுகாக்க கூடுதல் போலீஸார் நியமிக்கப்பட்டுள்ளதாக, மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளர் சக்திவேல் தெரிவித்தார்.
    திண்டுக்கல் மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளர் சக்திவேல், கொடைக்கானல் காவல் நிலையம், மகளிர் காவல் நிலையம்,மற்றும் வட்டக்கானல் பகுதியிலுள்ள காவல்துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள சோதனை மையம் ஆகியவற்றை வியாழக்கிழமை பார்வையிட்டு ஆய்வு நடத்தினார். அவருடன்,  டி.எஸ்.பி. செல்வம், ஆய்வாளர் முருகானந்தம் ஆகியோர் உடன் சென்றிருந்தனர். 
   பின்னர், அவர் வியாழக்கிழமை மாலை செய்தியாளர்களிடையே தெரிவித்தது:         கொடைக்கானலுக்கு தற்போது இஸ்ரேல் உள்ளிட்ட வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. இதனால், வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை பாதுகாப்பதற்காக 15 போலீஸார் கூடுதலாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
     மேலும், கொடைக்கானல் மலைப் பகுதி முழுவதும் அதிரடிப் படையினர் நக்சல் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். குற்றச் சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கவும், குற்றவாளிகளை எளிதல் கண்டுபிடிப்பதற்காகவும், கொடைக்கானல், அண்ணா சாலை, மூஞ்சிக்கல், லாஸ்காட்சாலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 64 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
    இரவு நேரங்களில் ரோந்து பணிக்காக காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் வாகனங்கள் மூலம் ரோந்து செல்வர். வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் தங்கியுள்ள வட்டக்கானல்  பகுதியில் தீவிர கண்காணிப்புப் பணியில் போலீஸார் ஈடுபட்டு வருகின்றனர் என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com