பழனி அரசு மருத்துவமனையில் நவீன முறையில் எலும்பு முறிவுக்கான சிகிச்சை

பழனி அரசு மருத்துவமனையில் எலும்பு முறிவு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நபருக்கு, சி.ஆர்ம் அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

பழனி அரசு மருத்துவமனையில் எலும்பு முறிவு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நபருக்கு, சி.ஆர்ம் அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
பழனி அரசு மருத்துவமனையில் தலைக் காயம் மற்றும் விபத்து சிகிச்சை பிரிவுக்கென தனிப் பிரிவு ஏற்படுத்தப்பட்டு, சிகிச்சை முறைகளும் நவீனப்படுத்தப்பட்டுள்ளது. சில நாள்களுக்கு முன் சுமார் ரூ. 20 லட்சம் மதிப்பிலான நவீன எலும்பு முறிவு சிகிச்சைக்கான இயந்திரமும், பழனி அரசு மருத்துவமனைக்கு வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், புதன்கிழமை பழனியை அடுத்த தாளையத்தைச் சேர்ந்த கூலி தொழிலாளி ராம்குமார் (27) என்பவருக்கு சி-ஆர்ம் என்ற நவீன முறையில், இடது கால் மூட்டின் மேல் உள்ள எலும்புக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில், லேப்ராஸ்கோப்பி அறுவைச் சிகிச்சை முறையில் நொறுங்கிய எலும்பு பகுதியில் பிரத்யேக ஸ்டீல் பொருத்தப்பட்டது.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் முதன்முறையாக இந்த அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து தலைமை மருத்துவ அலுவலர் டாக்டர் விஜயசேகர் கூறுகையில், இதுபோன்ற அறுவைச் சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனைகளில் ரூ. 80 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரை செலவாகும். அரசு மருத்துவமனைகளில் அறுவைச் சிகிச்சை செய்ய மதுரை அல்லது கோவைக்குதான் செல்லவேண்டும்.
ஆனால், தற்போது திண்டுக்கல் மாவட்டத்திலேயே முதன்முறையாக பழனி அரசு மருத்துவமனையில் இந்த அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த நவீன முறையில் அறுவைச் சிகிச்சை செய்த நபர், ஒரே நாளில் நடக்க முடியும். நாற்பது நாள்களில் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப முடியும் எனத் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com