கொடைக்கானலில் பீன்ஸ், சௌசௌ பயிர்களில் மஞ்சள் தேமல் நோய்

கொடைக்கானல் பகுதிகளில் பயிரிடப்பட்டுள்ள பீன்ஸ் மற்றும் சௌ,சௌ பயிரில் மஞ்சள் தேமல் நோய் தாக்கியுள்ளதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

கொடைக்கானல் பகுதிகளில் பயிரிடப்பட்டுள்ள பீன்ஸ் மற்றும் சௌ,சௌ பயிரில் மஞ்சள் தேமல் நோய் தாக்கியுள்ளதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
கொடைக்கானல் கீழ்மலைப் பகுதியான பண்ணைக்காடு, தாண்டிக்குடி ,ஊத்து, மூலையார், வடகரைப் பாறை உள்ளிட்ட பகுதிகளில் பீன்ஸ் மற்றும் சௌவ்,சௌ அதிக அளவில் விவசாயிகள் பயிரிட்டுள்ளனர். வழக்கம் போல ஜூன் மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரை பருவ மழை பெய்தால் விவசாயம் நன்கு வளரும்.
ஆனால் இந்தாண்டு மழை போதியளவு இல்லாததால் மஞ்சள் நோய் தாக்கி பீன்ஸ், சௌ,சௌ பயிர்கள் சேதமடைந்து விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால்  விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.  
இந்தப் பயிர்களை கொடைக்கானல் தோட்டக்கலைத்துறை அலுவலர்கள் பார்வையிட்டு விவசாயிகளுக்கு ஆலோசனைகள் வழங்கினர். கொடைக்கானல் கீழ்மலைப் பகுதிகளில் சேதமடைந்துள்ள பயிர்களை தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் மோகன்ராம் வெள்ளிக்கிழமை பார்வையிட்டு விவசாயிகளிடம் கூறியதாவது: தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் காலங்களில் பயிர்களில் மஞ்சள் தேமல் நோய் தாக்குதல் ஏற்படும். இந்த சமயத்தில் தோட்டக்கலைத்துறை அலுவலர்களிடம் ஆலோசனை பெறலாம்.மேலும் எந்த பயிர்களை விதைக்கும் போது அவற்றின் விதைகள் நேர்த்தியாக இருக்க வேண்டும். சொட்டு நீர்பாசனம் மூலம் ஊட்ட சத்துக்கள் கொடுத்தல், சரிவிகித பூச்சி தடுப்பு மருந்துகள் தெளித்தல்,ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு முறைகள் கடைபிடித்தல்  உள்ளிட்டவைகளை விவசாயிகள் கடைபிடிக்க வேண்டும். அவ்வாறு இருந்தால் பயிர்களில் நோய்கள் வர விடாமல் கட்டுப்படுத்த முடியும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com