பழனி அருகே திமுக சார்பில் குளத்தை தூர்வாரும் பணி தொடக்கம்

பழனியை அடுத்த பெத்தநாயக்கன்பட்டி மந்தைக்குளத்தை திமுக சார்பில் தூர்வாரும் பணியை ஞாயிற்றுக்கிழமை செந்தில்குமார் எம்எல்ஏ தொடக்கி வைத்தார்.

பழனியை அடுத்த பெத்தநாயக்கன்பட்டி மந்தைக்குளத்தை திமுக சார்பில் தூர்வாரும் பணியை ஞாயிற்றுக்கிழமை செந்தில்குமார் எம்எல்ஏ தொடக்கி வைத்தார்.
 அப்போது 15 நாள்களில் சுமார் ரூ.7 லட்சம் மதிப்பீட்டில் இந்த குளம் தூர்வாரப்படும் என எம்எல்ஏ. தெரிவித்தார். நிகழ்ச்சியில் நகர, ஒன்றிய திமுக நிர்வாகிகள் ஏராளமானோர் பங்கேற்றனர். இந்த தூர்வாரும் பணியில் 3 ஜேசிபி இயந்திரங்கள் மற்றும் டிராக்டர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. அப்போது பெத்தநாயக்கன்பட்டி சாலையில் உள்ள மதுக்கடையில் நாள் முழுக்க மது விற்கப்படுவதாக பொதுமக்கள், எம்எல்ஏவிடம் புகார் அளித்தனர். இதையடுத்து அங்கு சென்ற எம்எல்ஏ. செந்தில்குமார் கடையின் கண்காணிப்பாளர் மற்றும் விற்பனையாளரிடம் நாள் முழுதும் மதுவிற்பது தொடர்ந்தால் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com