திண்டுக்கல் மாவட்டத்தில் ரமலான் சிறப்பு தொழுகை

ரமலான் பண்டிகையை முன்னிட்டு, திண்டுக்கல் மாவட்டத்தில் 50-க்கும் மேற்பட்ட மசூதிகளில் திங்கள்கிழமை சிறப்பு தொழுகை நடைபெற்றது.

ரமலான் பண்டிகையை முன்னிட்டு, திண்டுக்கல் மாவட்டத்தில் 50-க்கும் மேற்பட்ட மசூதிகளில் திங்கள்கிழமை சிறப்பு தொழுகை நடைபெற்றது.
திண்டுக்கல் பேகம்பூர் பெரிய பள்ளிவாசலில் நடைபெற்ற சிறப்பு தொழுகையினை இமாம் என்.ஏ.அபூபக்கர் தொடக்கி வைத்தார். இதில் 3ஆயிரத்திற்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர். தொழுகையின் போது, வழக்கமான பிரார்த்தனைகளுடன், நாட்டில் மழை பெய்ய வேண்டியும் வழிபாடு நடத்தப்பட்டது. தொழுகை முடிந்து வெளியே வந்த இஸ்லாமியர்கள், ஒருவரையொருவர் கட்டித் தழுவி ரமலான் வாழ்த்துக்களைப் பரிமாறிக் கொண்டனர்.
நாகல்நகர் சந்தைரோடு ஜூம்மா பள்ளி வாசலில் நடைபெற்ற ரமலான் சிறப்பு தொழுகையினை பேஸ் இமாம் அப்துல் ரகுமான் நடத்தினார். இதில் 1000-க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர்.
இதேபோல் திண்டுக்கல் ரவுண்ட்ரோடு, பேருந்து நிலையம், நேருஜிநகர், ராமநாதபுரம் உள்ளிட்ட 20 பள்ளிவாசல்களிலும் ரமலான் தொழுகை நடைபெற்றது.
நத்தம்: நத்தம் அடுத்துள்ள கோவில்பட்டி கோரிமேடு ஈத்கா மைதானத்தில் நடைபெற்ற ரமலான் சிறப்பு தொழுகையில் ஏராளமான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர். அதேபோல் பரளி, வத்திப்பட்டி, கோசுக்குறிச்சி, வேம்பார்பட்டி, பெரியூர்பட்டி உள்ளிட்ட பகுதிகளிலும் சிறப்பு தொழுகை நடைபெற்றது.
வேடசந்தூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள மசூதிகளிலும் ரமலான் சிறப்பு தொழுகை நடைபெற்றது. பல்வேறு இடங்களிலும் ஏழை எளியாருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
பழனியில்..: பழனியை அடுத்த சண்முகநதி கொத்வா தர்காவில் ஆயிரத்து ஐநூறுக்கும் மேற்பட்டோர் திரண்டிருந்து சிறப்புத் தொழுகை நடத்தினர். பழனி அருகே பாலசமுத்திரம் தர்கா, ஆயக்குடி, சண்முகபுரம், திருநகர்
, புதுநகர் ஆகிய இடங்களில் உள்ள பள்ளிவாசல்களில் சிறப்புத் தொழுகை நடைபெற்றது. பழனி அருகே நெய்க்காரபட்டியில் ரமலான் திருநாளை முன்னிட்டு இனிப்புகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் முன்னாள் திமுக பேரூர் செயலாளர் சர்க்கரைமுகமது உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர். மேலும், ரமலான் திருநாளை முன்னிட்டு நெய்க்காரபட்டி, கீரனூர், ஆயக்குடி உள்ளிட்ட பகுதிகளில் இஸ்லாமிய கட்சியினரின் கொடியேற்று விழாவும் நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com