தலைமைச் செயலகத்தில் ஆய்வு: மத்திய அமைச்சரை தட்டிக்கேட்கஅதிமுகவுக்கு துணிவு இல்லை: ஐ.பெரியசாமி

தமிழக தலைமைச் செயலகத்தில் ஆய்வு நடத்திய மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடுவின் செயலை தட்டிக்கேட்க அதிமுவினருக்கு துணிவில்லை என, முன்னாள் அமைச்சர் ஐ. பெரியசாமி தெரிவித்தார்.

தமிழக தலைமைச் செயலகத்தில் ஆய்வு நடத்திய மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடுவின் செயலை தட்டிக்கேட்க அதிமுவினருக்கு துணிவில்லை என, முன்னாள் அமைச்சர் ஐ. பெரியசாமி தெரிவித்தார்.
   திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் ஒன்றிய திமுக சார்பில், சின்னாளப்பட்டியில் சனிக்கிழமை பொதுக்கூட்டம் நடைபெற்றது. காந்தி மைதானத்தில் நடைபெற்ற இக் கூட்டத்துக்கு, திண்டுக்கல் கிழக்கு மாவட்டச் செயலரும், எம்.எல்.ஏ.வுமான பெ. செந்தில்குமார் தலைமை வகித்தார். இதில், மாநில துணைப் பொதுச் செயலரும், எம்.எல்.ஏ.வுமான ஐ. பெரியசாமி பேசியதாவது:   சின்னாளபட்டி நகர மக்களின் வாழ்வாதாரமான நெசவுத் தொழிலும், சாயப் பட்டறைத் தொழிலும் அதிமுக ஆட்சியில் அழிந்துவிட்டன. சாயப் பட்டறைத் தொழிலாளர்கள் பிழைப்பு தேடி மதுரை, திருப்பூர், கரூருக்குச் செல்ல வேண்டிய நிலை கடந்த 5 ஆண்டுகளாகத் தொடர்ந்து கொண்டிருக்கிறது.
   கொல்லைப்புறம் வழியாக நுழைந்து தமிழகத்தில் ஆட்சியைப் பிடிக்க பாஜக முயற்சித்து வருகிறது. தலைமைச் செயலகத்தில் எந்தவொரு மத்திய அமைச்சரும் ஆய்வு செய்ததில்லை. ஆனால், மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு, தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி முன்னிலையில் ஆய்வு செய்துள்ளார். இதனை தட்டிக் கேட்க எந்த அதிமுகவினருக்கும் துணிவில்லை.
   பாஜக ஆட்சி செய்யாத மாநிலங்களில் சிபிஐ மூலம் எதிர்க் கட்சிகளை வளைக்கும் பணிகளை, பிரதமர் மோடி செய்து வருகிறார். அதிமுக மூலம், தமிழகத்தில் கால் பதிப்பதற்கான முயற்சியில் பாஜக இறங்கியுள்ளது. ஆனால், தமிழகத்தில் ஒருபோதும் பாஜகவால் காலூன்ற முடியாது என்றார்.
   கூட்டத்தில், மாநில கொள்கை பரப்புச் செயலர் ஆ. ராசா, திண்டுக்கல் மேற்கு மாவட்டச் செயலர் அர. சக்கரபானி, எம்.எல்.ஏ. ஆண்டி அம்பலம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com