விவசாயக் கடன் தள்ளுபடி கோரி திண்டுக்கல்லில் ஆர்ப்பாட்டம்

விவசாயக் கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வலியுறுத்தி திண்டுக்கல்லில் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

விவசாயக் கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வலியுறுத்தி திண்டுக்கல்லில் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
 அனைத்து விவசாய சங்கக் கூட்டமைப்பு சார்பில் திண்டுக்கல் மணிக்கூண்டுப் பகுதியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட விவசாயிகள் சங்கத் தலைவர் லட்சுமணப் பெருமாள் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தின் போது,  விவசாயக் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும். 
விவசாயிகளுக்கு நியாயமாக கிடைக்க வேண்டிய கொள்முதல் விலையை உறுதி செய்ய வேண்டும். உற்பத்தி செலவுடன் 50 சதவீத கூடுதல் விலை என்ற எம்.எஸ்.சுவாமிநாதன் அறிக்கையை சட்டமாக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.
 அதனைத் தொடர்ந்து ஆத்தூர் வட்டார விவசாய சங்கத் தலைவர் பாத்திமா ராஜரத்தினம் பேசுகையில், விவசாயம் மூலம் 44 சதவீத வேலைவாய்ப்பும், மத்திய மாநில அரசுகளுக்கு 80 சதவீத வருமானமும் கிடைத்து வருகிறது. 
இதனால், விவசாயத்தை ஒரு தொழிலாக மத்திய அரசு அறிவிக்க வேண்டும். அதன் மூலம் நலிவடையும் நேரத்தில், விவசாயத்தை மீண்டும் வளம் பெறுவதற்கான சலுகைள் கிடைக்கும் வாய்ப்பு ஏற்படும் என்றார்.
 அதனைத் தொடர்ந்து புதுதில்லியில் ராம்லீலா மைதானத்தில் நவ. 2 ஆம் தேதி நடைபெறும் போராட்டத்திற்கு திண்டுக்கல் மாவட்டத்திலிருந்து 50 விவசாயிகள் பங்கேற்பது என முடிவு செய்யப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com