திண்டுக்கல் மாவட்டத்தில் குழந்தைகள் தின விழா

நாட்டின் முதல் பிரதமரான ஜவாஹர்லால் நேருவின் பிறந்த நாள் விழா, திண்டுக்கல் மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளில்  செவ்வாய்க்கிழமை  கொண்டாடப்பட்டது.

நாட்டின் முதல் பிரதமரான ஜவாஹர்லால் நேருவின் பிறந்த நாள் விழா, திண்டுக்கல் மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளில்  செவ்வாய்க்கிழமை  கொண்டாடப்பட்டது.
திண்டுக்கல் மாவட்டம், சாணார்பட்டியில்  உள்ள அக்னிச் சிறகுகள் சமூக சேவை  மற்றும் இலவசப் பயிற்சி  மைய அறக்கட்டளை சார்பில், குழந்தைகள் தின விழா கொண்டாடப்பட்டது. சாணார்பட்டி ஊராட்சி ஒன்றிய  தொடக்கப் பள்ளியில்  நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, பள்ளியின் தலைமையாசிரியை சரஸ்வதி தலைமை வகித்தார். அறக்கட்டளையின் நிறுவனர் ஏ. முருகானந்தம் முன்னிலை வகித்தார். இதனையொட்டி, பள்ளி குழந்தைகளுக்கு  ஓட்டம், விடுகதை, ஓவியம், பாடல் மற்றும் திருக்குறள் ஒப்புவித்தல் உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றன. குழந்தைகள் சார்பில் அமைக்கப்பட்டிருந்த இயற்கை மூலிகைக் கண்காட்சியும் நடைபெற்றது.
காங்கிரஸ் சிறுபான்மைப் பிரிவு: திண்டுக்கல்-நத்தம் சாலையில் உள்ள நேரு சிலைக்கு காங்கிரஸ் சிறுபான்மைப் பிரிவின் மாநில முன்னாள் துணைத் தலைவர்  ஏ. அப்துல்ஜபார்  தலைமையில் மாலை  அணிவித்து  மரியாதை  செலுத்தப்பட்டது. தொடர்ந்து,  கென்னடி  மெட்ரிக். பள்ளி  மாணவர்களுக்கு  இனிப்புகள்  வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில், பள்ளியின்  நிர்வாகி அப்துல்ரசாக், தலைமையாசிரியை மரகதம், காந்தி இயக்கத்தின் பொதுச் செயலர் மருது உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
பெருந்தலைவர் காமராஜர் தேசிய பேரவை: காங்கிரஸ் நிர்வாகி நடூர் கனகராஜ் தலைமையில், நத்தம் சாலையில் உள்ள நேரு சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. சிறப்பு அழைப்பாளராக, மாவட்டத் தலைவர் ராமு. ராமசாமி கலந்துகொண்டார்.
நத்தம் அரசு மேல்நிலைப் பள்ளி: திண்டுக்கல் மாவட்டம், நத்தம் துரைக்கமலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற குழந்தைகள் தின விழாவுக்கு, வேம்பார்பட்டி கண்ணு முகமது தலைமை வகித்தார். பள்ளியின் தலைமையாசிரியர் லெட்சுமணன்  முன்னிலை வகித்தார். முன்னதாக, விளையாட்டுப் போட்டிகளும், நேரு தொடர்பான கட்டுரை, பாடல்   மற்றும் ஓவியப் போட்டிகளும் நடைபெற்றன. அதில், வெற்றி பெற்ற  மாணவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.
ஸ்ரீவாசவி மெட்ரிக் பள்ளி: திண்டுக்கல் கோவிந்தாபுரத்தில் உள்ள பள்ளி வளாகத்தில் நடைபெற்ற குழந்தைகள் தின நிகழ்ச்சிக்கு, தாளாளர் ஸ்ரீதரன் தலைமை வகித்தார். மாணவர்களுக்கு மாறுவேடப் போட்டி, பேச்சுப் போட்டி மற்றும் ஓவியப் போட்டிகள் நடைபெற்றன. பள்ளி முதல்வர் எம்.கல்யாணி முன்னிலை வகித்தார்.
சேரன் வித்யாலயா மெட்ரிக். பள்ளி: பள்ளியின் முதல்வர் திலகம் தலைமையில் நடைபெற்ற குழந்தைகள் தின நிகழ்ச்சியில், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்துகொண்டனர். இதனை முன்னிட்டு, நடன இசை கலை நிகழ்ச்சிக்கள் நடைபெற்றன.
கொடைக்கானல்: முன்னாள் பிரதமர் நேருவின் பிறந்த நாளை முன்னிட்டு, கொடைக்கானல் ஏரிச் சாலையிலுள்ள அவரது சிலைக்கு காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந் நிகழ்ச்சியில், திண்டுக்கல் கிழக்கு மாவட்டத் தலைவர் அப்துல்கனிராஜா மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள், மகளிர் அணியினர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
பழனி: நேருவின் பிறந்த நாளை முன்னிட்டு, பழனி ரயில் நிலையத்தில் உள்ள அவரது சிலைக்கு காங்கிரஸ் கட்சியின் திண்டுக்கல் மேற்கு மாவட்டக் கமிட்டி சார்பில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. மாவட்டத் தலைவரும், நல்லாசிரியருமான சுந்தரம் சிலைக்கு மாலையணிவித்து மலர்கள் தூவினார். தொடர்ந்து, கட்சியினர் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர். நிகழ்ச்சியில், நகர கமிட்டி தலைவர் முத்துவிஜயன், மாநில கமிட்டி உறுப்பினர் சின்னச்சாமி, ஐஎன்டியூசி நாகராஜன், பாலசமுத்திரம் முருகானந்தம், மாரிக்கண்ணு உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com