பழனி-கொடைக்கானல் சாலையில் விளம்பர பதாகைகள் அகற்றம்

பழனியில் இருந்து கொடைக்கானல் செல்லும் வழியில் சாலையோரம் வைக்கப்பட்டிருந்த பிரமாண்ட விளம்பர பதாகைகள் ஞாயிற்றுக்கிழமை அகற்றப்பட்டன.

பழனியில் இருந்து கொடைக்கானல் செல்லும் வழியில் சாலையோரம் வைக்கப்பட்டிருந்த பிரமாண்ட விளம்பர பதாகைகள் ஞாயிற்றுக்கிழமை அகற்றப்பட்டன.
 பழனியில் இருந்து கொடைக்கானல் செல்லும் சாலையில் முக்கியமான திருப்பங்களில் சாலையோரம் விடுதிகள், உணவகங்கள் உள்ளிட்டவற்றின் பிரமாண்டமான விளம்பர பதாகைகள் வைக்கப்பட்டிருந்தன.  
இந்நிலையில் சனிக்கிழமை வரதமாநதி அணையில் தண்ணீர் திறப்பு நிகழ்ச்சிக்கு வந்த மாவட்ட ஆட்சியர் வினய் இந்த விளம்பர பதாகைகள் வைக்க மாவட்ட ஆட்சியர் அலுவலக அனுமதி வழங்கப்பட்டுள்ளதா என விசாரணை மேற்கொண்ட போது அதற்கான அனுமதி இல்லை என தெரியவந்தது. 
 இதையடுத்து அந்த பதாகைகளை அகற்றுமாறு பாலசமுத்திரம் பேரூராட்சி அதிகாரிகளுக்கு அவர் அறிவுரை வழங்கினார்.  இதையடுத்து ஞாயிற்றுக்கிழமை பாலசமுத்திரம் பேரூராட்சி செயல் அலுவலர் பாலசுப்ரமணி, அலுவலர் ஐயப்பன் உள்ளிட்டோர் அங்கு சென்று இயந்திரங்கள் உதவியுடன் பதாகைகளை அகற்றினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com