திண்டுக்கல், தேனியில் காங். ஆர்ப்பாட்டம்

திண்டுக்கல் மாவட்டம் நத்தம்  மற்றும் தேனியில் பாஜ தலைவர்கள் முறைகேடாக சொத்து குவிப்பில் ஈடுபட்டு வருவதாக புகார் தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திண்டுக்கல் மாவட்டம் நத்தம்  மற்றும் தேனியில் பாஜ தலைவர்கள் முறைகேடாக சொத்து குவிப்பில் ஈடுபட்டு வருவதாக புகார் தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தேனி, பங்களாமேடு திடலில் தேனி மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்டத் தலைவர் முருகேசன் தலைமை வகித்தார். நகரத் தலைவர் முனியாண்டி முன்னிலை வகித்தார்.
பாஜக தலைவர்கள் முறைகேடாக சொத்து குவிப்பில் ஈடுபட்டு வருவதாகவும்,  அக்கட்சியின் தலைவர் அமித்ஷா  மகன் ஜெய்ஷா மீது சொத்து குவிப்பு மற்றும் வரி ஏய்ப்பு தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு மத்திய அரசு உத்தரவிட வேண்டும் என்று கோரியும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மாவட்ட பொருளாளர் பாலசுப்பிரமணியம், துணைத் தலைவர் கருப்பசாமி, பொதுச் செயலர்கள் ஹக்கீம், மனோகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
திண்டுக்கல்:  நத்தம் பேருந்து நிலைய ரவுண்டானா பகுதியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுக்குழு உறுப்பினர் முகமது அலி தலைமை வகித்தார். வட்டாரத் தலைவர் செந்தில்நாதன் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தின் போது, மத்திய அரசு கொண்டு வந்துள்ள ஜிஎஸ்டி வரியால் தொழில்துறை முடங்கி விட்டது.
பாஜக அரசு பதவி விலக வேண்டும்.  பாஜக தேசிய தலைவர் அமித்ஷா மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com