ரத்ததான விழிப்புணர்வு பணியில் செஞ்சிலுவை சங்கத்தினர் தீவிரம் காட்ட வேண்டும்: ஆட்சியர்

கிராமப்புறங்களில் ரத்ததானம், உடலுறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வு பணியில் செஞ்சிலுவை சங்கத்தினர் தீவிரமாக ஈடுபட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் டி.ஜி.வினய் தெரிவித்தார்.

கிராமப்புறங்களில் ரத்ததானம், உடலுறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வு பணியில் செஞ்சிலுவை சங்கத்தினர் தீவிரமாக ஈடுபட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் டி.ஜி.வினய் தெரிவித்தார்.
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற இந்திய செஞ்சிலுவை சங்கத்தின் திண்டுக்கல் கிளையின் புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு நிகழ்ச்சி மற்றும் பொதுக்குழுக் கூட்டத்துக்கு தலைமை வகித்து அவர் பேசியதாவது:
பேரிடர் காலங்களில் பொதுமக்களுக்கு உதவும் பணிகளில் செஞ்சிலுவை சங்கம் முக்கிய பங்கு வகிக்கிறது. அதே போல், அதிக விபத்துகள் நிகழும் திண்டுக்கல் மாவட்டத்தில், எதிர்காலத்தில் விபத்து பாதிப்புகளை தவிக்கும் வகையில் வாகன ஓட்டிகளிடையே சாலை பாதுகாப்பு குறித்தும், தலைக்கவசம் அணிவது குறித்தும் விழிப்புணர்வை செஞ்சிலுவை சங்கத்தினர் ஏற்படுத்த வேண்டும். புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள செஞ்சிலுவை சங்க நிர்வாகிகள் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமப்புறங்களிலும் ரத்ததானம் முகாம் மற்றும் உடல் உறுப்பு தானம் செய்வது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியில் ஈடுபட வேண்டும்.
மாவட்ட செஞ்சிலுவை சங்கத்துக்கு கட்டடம் கட்டுவதற்கு நீண்டநாள் கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது. விரைவில் இடம் தேர்வு செய்து கொடுக்கப்படும் என்றார்.
முன்னதாக செஞ்சிலுவை சங்க கிளையின் புதிய அவைத் தலைவராக நாட்டாமை என்.எம்.பி.காஜாமொஹைதீன், செயலராக ராஜகுரு ஆகியோர் பொறுப்பேற்றுக் கொண்டனர். நிகழ்ச்சியில் நலப்பணிகள் இணை இயக்குநர் ஜெ.மாலதிபிரகாஷ், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ச.கோபிதாஸ், மாவட்ட செஞ்சிலுவை சங்கச் செயலர் சேக்தாவூத் (சுரபி கல்வி நிறுவனங்கள்) ஜோதிமுருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com