பழனியில் உலக சித்தர் தினவிழா

பழனியில் பாரம்பரிய சித்த மருத்துவர் நலச்சங்கம் சார்பில் 10ம் ஆண்டாக ஆண்டு உலக சித்தர் தினவிழா கொண்டாடப்பட்டது.

பழனியில் பாரம்பரிய சித்த மருத்துவர் நலச்சங்கம் சார்பில் 10ம் ஆண்டாக ஆண்டு உலக சித்தர் தினவிழா கொண்டாடப்பட்டது.
 பழனி பேருந்து நிலையம் ரவுண்டானா அருகே ஞாயிற்றுக்கிழமை பாரம்பரிய சித்தர் நலச்சங்கம் சார்பில் நடைபெற்ற சித்தர் தினவிழாவை முன்னிட்டு  சிவசாமி தலைமையில் சித்தர் கொடியேற்றப்பட்டது.  தொடர்ந்து ஓதுவார் திருமுறைப்பாடல்கள் பாட, போகர் சித்தர் படத்துக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. 
  தொடர்ந்து அகிலிகா ஹெர்பல் இன்ஸ்டிட்யூட் வளாகத்தில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.  சங்க தலைவர் மாதாகுருஜி தாண்டேஸ்வரன் தலைமை வகித்தார்.  செயலாளர் கண்ணபிரான் முன்னிலை வகித்தார்.  பொருளாளர் ரெங்கநாதன் வரவேற்றார்.  பொள்ளாச்சி சிறுவேடசெந்தூர் சங்க தலைவர் ஜோதிடர் பழனிச்சாமி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு அகத்தியர், போகர், வள்ளலார் படங்களை திறந்து வைத்தார்.  விழாவில் ஏராளமான சித்த மருத்துவர்கள் பங்கேற்று தங்கள் சித்த மருத்துவ அனுபவங்களையும், மூலிகைகள் மூலம் மருந்து தயாரித்தல் குறித்து செய்முறை விளக்கம் கொடுத்தனர்.  விழா நிறைவில் சித்த மருத்துவ படிப்பு முடித்தவர்களுக்கும், மருத்துவ பயிற்சி முடித்தவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.  விழாவில் பாலு, ரவிபால்,  ராஜ்குமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com