தேசிய திறனாய்வுத் தேர்வில்  கள்ளிமந்தையம் பள்ளி மாணவ, மாணவிகள் சாதனை

தேசிய திறனாய்வுத் தேர்வில் கள்ளிமந்தையம் பள்ளி மாணவ, மாணவிகள் சாதனை படைத்துள்ளனர்.

தேசிய திறனாய்வுத் தேர்வில் கள்ளிமந்தையம் பள்ளி மாணவ, மாணவிகள் சாதனை படைத்துள்ளனர்.
             எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவ-மாணவிகளை ஊக்குவிக்கும் விதமாக மத்திய அரசால் வழங்கப்படும் கல்வி உதவித்தொகைக்கான தேசிய திறனாய்வுத்தேர்வு 2017-18-ம் கல்வியாண்டில் நடைபெற்றது. இத்தேர்வில் ஒட்டன்சத்திரம் அடுத்துள்ள கள்ளிமந்தையம் திருப்பதி அருள்நெறி மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த மாணவ-மாணவிகள் 12 பேர் தேர்வு எழுதினர். அதில் 7 பேர் தேர்ச்சி பெற்றனர்.இப்பள்ளியைச் சேர்ந்த மாணவன் டி.வீரமுத்து என்ற மாணவர் 108 மதிப்பெண்கள் பெற்று மாவட்ட அளவில் 7 -ஆம் இடம் பிடித்தார்.தேர்வில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகையாக 9-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை மாதம் ரூ.500 வீதம் கிடைக்கும். தேர்வில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பாராட்டு விழா புதன்கிழமையன்று பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இதில் பள்ளி தலைமையாசிரியர் என்.கே.கருப்புச்சாமி மற்றும் ஆசிரிய-ஆசிரியைகள் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பாராட்டும் வாழ்த்தும் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com