குழந்தைகளின் இறப்பு விகிதத்தை குறைக்க அரசு மருத்துவர்களுக்கு சிறப்பு பயிற்சி

குழந்தைகளின் இறப்பு விகிதத்தை குறைக்க, திண்டுக்கல் அரசு மருத்துவமனை மருத்துவர்களுக்கு சிறப்பு பயிற்சி முகாம் புதன்கிழமை நடைபெற்றது. 

குழந்தைகளின் இறப்பு விகிதத்தை குறைக்க, திண்டுக்கல் அரசு மருத்துவமனை மருத்துவர்களுக்கு சிறப்பு பயிற்சி முகாம் புதன்கிழமை நடைபெற்றது. 
 தமிழகத்தில் உள்ள மருத்துவக் கல்லூரி அல்லாத 30 அரசு தலைமை மருத்துவமனைகளில் ரூ.112 கோடி செலவில், குழந்தைகள் அவசர சிகிச்சைப் பிரிவு தொடங்க தேசிய சுகாதார திட்டத்தின் கீழ் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 
ஒரு  மாதம் முதல் 12 வயதுள்ள குழந்தைகளுக்கான அவசர சிகிச்சைப் பிரிவு 
(டதஉங - டங்க்ண்ஹற்ழ்ண்ஸ்ரீ தங்ள்ன்ள்ஸ்ரீண்ற்ஹற்ண்ர்ய் உம்ங்ழ்ஞ்ங்ய்ஸ்ரீஹ் ஙங்க்ண்ஸ்ரீண்ய்ங்) 4 முதல் 6 படுக்கை வசதிகளுடன் தனிப் பிரிவாக தொடங்கப்பட்டுள்ளது. 
 திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் தொடங்கப்பட்டுள்ள குழந்தைகள் அவசர சிகிச்சைப் பிரிவில், செயற்கை சுவாசக் கருவி உள்ளிட்ட அடிப்படை வசதிகளுடன் 6 படுக்கைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில், குழந்தைகளுக்கான அவசர சிகிச்சை முறைகள் குறித்து மருத்துவர்களுக்கான சிறப்பு பயிற்சி முகாம் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் புதன்கிழமை நடைபெற்றது. இதற்கு நலப் பணிகள் இணை இயக்குநர் ஜெ.மாலதி பிரகாஷ் தலைமை வகித்தார். கண்காணிப்பாளர் சிவக்குமார், குழந்தைகள் நலப் பிரிவு தலைமை மருத்துவர் பாலசுப்பிரமணியம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 
 முகாமில், குழந்தைகள் நல மருத்துவர்கள் மட்டுமின்றி பொது மருத்துவர்கள், செவிலியர்கள் என 40-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனை மருத்துவர்கள் எஸ்.இந்துமதி சந்தானம், எஸ்.சாந்தி, மதுரை மருத்துவர் சந்தன் ஆகியோர் பயிற்சி அளித்தனர். 
 இதுகுறித்து மருத்துவர் எஸ்.இந்துமதி சந்தானம் கூறியதாவது: கடந்த 1997ஆம் ஆண்டு முதல் எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவு செயல்பட்டு வருகிறது. அப்போது முதல் மருத்துவர்கள் மேற்கொண்ட சிகிச்சை முறைகளால், 50 சதவீதமாக இருந்த குழந்தைகளின் இருப்பு விகிதம் 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையிலேயே, தமிழகத்தின் பிற பகுதிகளிலும் குழந்தைகளுக்கான அவசர சிகிச்சைப் பிரிவை ஏற்படுத்த தேசிய சுகாதார திட்டத்தின் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 
 உடல் நல குறைவினால் மருத்துவமனைக்கு வரும் குழந்தைகளுக்கு, அனுமதி சீட்டு பெறும் முன்பே உடனடி சிகிச்சை அளிக்க வேண்டும். தாமதம் இல்லாத சிகிச்சையின் மூலம் குழந்தைகளின இறப்பு விகிதத்தை கட்டுப்படுத்த முடியும். அந்தந்த மாவட்டங்களில் அளிக்கப்படும் முதல் கட்ட பயிற்சிகளுக்கு பின், விரும்பமுள்ள மருத்துவர்களை சென்னைக்கு வரவழைத்து அரசு செலவில் 3 மாத பயிற்சி அளிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com