கொடைக்கானலில் கொய்மலர்கள் விளைச்சல் அதிகரிப்பு: விவசாயிகள் மகிழ்ச்சி

கொடைக்கானல் பகுதியில் கொய்மலர்கள் நன்கு விளைச்சல் கண்டுள்ளதாலும் நல்ல விலை கிடைப்பதாலும் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

கொடைக்கானல் பகுதியில் கொய்மலர்கள் நன்கு விளைச்சல் கண்டுள்ளதாலும் நல்ல விலை கிடைப்பதாலும் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
கொடைக்கானல் பகுதிகளான மன்னவனூர், கூக்கால், வடகவுஞ்சி, பண்ணைக்காடு, தாண்டிக்குடி, பூண்டி, செண்பகனூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் குடில்கள் அமைத்து, விவசாயப் பயிர்களுக்கு அடுத்தபடியாக கொய்மலர்கள் உற்பத்தி செய்யும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். 
இந்த ஆண்டு கொய்மலர் நல்ல விளைச்சல் இருந்ததால், கடந்த ஒரு மாதமாக அவற்றை அறுவடை செய்து தமிழகம் மட்டுமின்றி, வெளி மாநிலங்களுக்கும் அனுப்பும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
இது குறித்து கொய்மலர்கள் உற்பத்தி செய்யும் விவசாயிகள் கூறியது: 
கொடைக்கானலில் பல்வேறு கிராமப் பகுதிகளில் சீதோஷ்ண நிலைக்கு ஏற்ற இடத்தில் குடில் அமைத்து, கொய்மலர்களான காரனேன் மலர்கள், ரோஜாக்கள் மஞ்சள், சிவப்பு, வெள்ளை உள்ளிட்ட பல்வேறு வண்ண மலர்கள் வளர்க்கப்படுகின்றன. தற்போது, அவற்றை அறுவடை செய்யும் பணி நடைபெற்று வருகிறது.
 மேலும், விற்பனை நன்றாக இருப்பதால், தமிழகம், கர்நாடகம், ஆந்திரம், கோவா  உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு அனுப்பும் பணியில் ஈடுபட்டு வருகிறோம். ஒரு பூவின் விலை ரூ. 7 முதல் ரூ.10 வரை விற்பனை செய்யப்படுகிறது. இது மார்க்கெட்டில் ரூ. 15 வரை விற்கப்படுகிறது. இந்தாண்டு நல்ல விளைச்சல்  கிடைத்தும், வெளிச் சந்தையில் நல்ல லாபம்  கிடைத்துளளது. 
தொடர்ந்து இரண்டு மாதங்களுக்கு வெளிமாநிலங்களுக்கு அனுப்பி வருவோம். அதன்பின்னர், மொத்த சந்தையிலும், சில்லறை விற்பனை மையங்களுக்கும் அனுப்புவோம். தற்போது நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளிலும், விழாக்களிலும் கொய்மலர்கள் அதிகமாக பயன்படுத்தப்பட்டு வருவதால், தொடர்ந்து எங்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கிறது என்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com