திண்டுக்கல் அருகே லாரி ஓட்டுநர் குடும்பத்தோடு தற்கொலை முயற்சி: மனைவி சாவு

திண்டுக்கல் மாவட்டம் செங்குறிச்சியைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் விஷம் குடித்து குடும்பத்தோடு புதன்கிழமை தற்கொலைக்கு முயன்றார். இதில், அவரது மனைவி சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

திண்டுக்கல் மாவட்டம் செங்குறிச்சியைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் விஷம் குடித்து குடும்பத்தோடு புதன்கிழமை தற்கொலைக்கு முயன்றார். இதில், அவரது மனைவி சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.
 திண்டுக்கல் மாவட்டம், செங்குறிச்சி பகுதியைச் சேர்ந்தவர் செந்தில்குமார் (35). லாரி ஓட்டுநர். இவரது மனைவி மாலதி (26). அங்கன்வாடி ஊழியர். இவர்களது மகள் கன்னிகா (10), மகன் கார்த்தி (7).  இந்நிலையில், புது வீடு கட்டுவதற்காக செந்தில்குமார் முயற்சி மேற்கொண்டார். கட்டுமானப் பணிகள் பாதியில் நிற்கும் நிலையில், மேலும் பணிகளை தொடருவதற்கு பணம் இல்லாததால் மனமுடைந்த செந்தில்குமார் குடும்பத்தோடு தற்கொலை செய்து கொள்ள முடிவு எடுத்தாராம். 
இதைத் தொடர்ந்து மனைவி மற்றும் குழந்தைகளுக்கு  விஷ விதையை அரைத்துக் கொடுத்து விட்டு, தானும் விஷம் குடித்தார். 
இதையடுத்து, செங்குறிச்சி ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்ட 4 பேரும், தீவிர சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு பரிந்துரை செய்யப்பட்டனர்.  அங்கு, மாலதி சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். செந்தில்குமார், கன்னிகா, கார்த்தி ஆகியோருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.  வடமதுரை போலீஸார் விசாரிக்கின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com