பாலாறு-பொருந்தலாறு அணையிலிருந்து முறைப்பாசனம் நடைமுறைப்படுத்தப்படும்: ஆட்சியர்

பாலாறு-பொருந்தலாறு அணையிலிருந்து முறைப் பாசனம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளதால், புதிதாக சாகுபடி பணிகளை விவசாயிகள் தொடங்க வேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

பாலாறு-பொருந்தலாறு அணையிலிருந்து முறைப் பாசனம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளதால், புதிதாக சாகுபடி பணிகளை விவசாயிகள் தொடங்க வேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
      இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தெரிவித்துள்ளதாவது: திண்டுக்கல் மாவட்டம், பழனி வட்டத்தில் உள்ள பாலாறு-பொருந்தலாறு அணையின் மூலம் ஜமீன் கால்வாய், தாடாகுளம் கால்வாய், பழைய அணைக்கட்டு கால்வாய் மற்றும் இடது பிரதானக் கால்வாய் பாசன விவசாயிகளுக்கு தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது.
     கடந்த டிசம்பர் முதல் தற்போது வரை அணைக்கு எதிர்பார்த்த தண்ணீர் வரத்து இல்லாததால், பாசனப் பகுதிகளுக்கு தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. எனவே, முறைப்பாசனம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளதால், விவசாயிகள் தண்ணீரை சிக்கனமாகப் பயன்படுத்தி ஒத்துழைக்க வேண்டும்.
    பாலாறு-பொருந்தலாறு இடது பிரதானக் கால்வாயில் பாசனப் பகுதியில் கால்வாயில் தண்ணீர் வழங்கப்படுவதற்கு முன்னரே சாகுபடி செய்யப்பட்டுள்ள பயிர்களுக்கு மட்டுமே உயிர் தண்ணீர் கொடுக்க முடியும். தண்ணீர் பற்றாக்குறையை கருத்தில் கொண்டு, புதிதாக சாகுபடி பணிகளை விவசாயிகள் மேற்கொள்ள வேண்டாம் என தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com