அரசு ஊழியர்களுக்கான விளையாட்டுப் போட்டி: இன்று மாலைக்குள் பெயர் பதிவு செய்ய அறிவுறுத்தல்

அரசு ஊழியர்களுக்கான விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க விருப்பமுள்ளவர்கள், புதன்கிழமை (மார்ச் 21) மாலை 4 மணிக்குள் பெயர்களை பதிவு செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசு ஊழியர்களுக்கான விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க விருப்பமுள்ளவர்கள், புதன்கிழமை (மார்ச் 21) மாலை 4 மணிக்குள் பெயர்களை பதிவு செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
   இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் டி.ஜி.வினய் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:
 தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் (திண்டுக்கல் பிரிவு) சார்பில், அரசு அலுவலர்களுக்கான தடகளம் மற்றும் குழு விளையாட்டுப் போட்டிகள் மார்ச் 23-ஆம் தேதி மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடைபெற உள்ளது.  
போட்டிகள் விவரம்:  தடகள விளையாட்டுப் போட்டிகள்: 100 மீ, 200 மீ, 800 மீ, 1500 மீ ஒட்டம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், குண்டு எறிதல் மற்றும் 4 00 மீ தொடர் ஓட்டம் ஆகிய போட்டிகள் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு தனித்தனியே நடத்தப்படும்.
 குழு விளையாட்டில், இறகுப்பந்து, கூடைப்பந்து, டென்னிஸ், கபடி, மேஜைப்பந்து மற்றும் வாலிபால் இருபாலருக்கும், ஆண்கள் மட்டும் பங்கேற்கும் வகையில் கால்பந்து போட்டியும் நடைபெறும்.
 திண்டுக்கல் மாவட்டத்தில் பணிபுரியும் அனைத்து அரசுத்துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் இப்போட்டியில் பங்கு பெறலாம். (ஜிபிஎப் அல்லது சிபிஎஸ் எண் கட்டாயம் இருக்க வேண்டும்).  போட்டியில் பங்கேற்க வயது வரம்பு கிடையாது. பங்கேற்போருக்கு சிறப்பு தற்செயல் விடுப்பு வழங்கப்படும்.
 மாவட்ட அளவில் வெற்றி பெறுவோர், மாநில அளவிலான போட்டியில் பங்கேற்க அழைத்துச் செல்லப்படுவார்கள். அதில் வெற்றி பெறுவோர், தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்கலாம். சீருடை பணியாளர்கள் இப்போட்டியில் பங்கேற்க அனுமதி இல்லை.
 பங்கேற்க விருப்பமுள்ளவர்கள், துறை அலுவலர்கள் மூலம் பெயர் பட்டியலை அனுப்பிட வேண்டும். ஒரு தடகள போட்டி மற்றும் ஒரு குழு போட்டியில் மட்டுமே ஒருவர் பங்கேற்க முடியும். பெயர் பட்டியலை, மாவட்ட விளையாட்டு அலுவலர், மாவட்ட விளையாட்டரங்கம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், தாடிக்கொம்பு ரோடு, திண்டுக்கல்- 624004 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
 இதுதொடர்பான கூடுதல் விவரங்கள் பெற 0451-2461162 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com