மத்திய அரசின் தவறான நடவடிக்கைகளுக்கு  தமிழக அரசு துணை நிற்கிறது: முத்தரசன்

மத்திய அரசின் தவறான நடவடிக்கைகளுக்கு, தமிழக அரசு துணை நிற்பதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலர் இரா.முத்தரசன் தெரிவித்தார். 

மத்திய அரசின் தவறான நடவடிக்கைகளுக்கு, தமிழக அரசு துணை நிற்பதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலர் இரா.முத்தரசன் தெரிவித்தார். 
செரின் தொண்டு நிறுவனம் மற்றும் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் சார்பில் இரா.விச்சலன் எழுதிய கலைந்த கனவுகள் நூல் வெளியீட்டு விழா திண்டுக்கல் ஒய்எம்ஆர்பட்டி பகுதியில் திங்கள்கிழமை நடைபெற்றது.  இவ்விழாவுக்கு பாரதிதாசன் பல்கலைக்கழக மகளிரியல் துறைத் தலைவர் என்.மணிமேகலை தலைமை வகித்தார்.   
இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலர் இரா.முத்தரசன், நூலை வெளியிட்டு  சிறப்புரை நிகழ்த்தினார். முதல் பிரதிகளை பஞ்சாலைத் தொழிலாளர்கள் ஏ.பாப்பாத்தி, கே.ரூபினி ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.  விழாவில் இ.கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயற்குழு உறுப்பினர் க.சந்தானம், சாகித்ய அகாதெமி விருதாளர் பா.ஆனந்தகுமார், செரின் தொண்டு நிறுவன இயக்குநர் ச.ஜேம்ஸ்விக்டர், பஞ்சாலை 
மற்றும் பொதுத் தொழிலாளர் சங்க மாநிலத் தலைவர் எஸ்.திவ்யா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
முன்னதாக முத்தரசன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
அனைவருக்கும் சமமாக இருக்க வேண்டிய சட்டம், தமிழகத்தில் மட்டும் வேறுபட்டுள்ளது. பாஜக தலைவர்களுக்கு மட்டும் ஒரு சட்டம் கடைபிடிக்கப்பட்டு வரும்போது, மற்றவர்களுக்கு வேறு மாதிரியான சட்டம் அமல்படுத்தப்படுகிறது.   
தமிழக முதல்வர் மீது ஊழல் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது என சென்னை உயர் நீதிமன்றத்தில் அரசு தரப்பு வழக்குரைஞர் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார். ஆனால், அதற்கு மாறான கருத்துக்களை முதல்வர் தொடர்ந்து கூறி வருகிறார். இன்றையக்கு,  கிராம நிர்வாகம் முதல் தலைமைச் செயலகம் வரை அனைத்து நிலைகளிலும் ஊழல் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. 
 கடந்த 4 ஆண்டுகளாக, அரசியலமைப்புச் சட்டத்திற்கு விரோதமாக மத்திய அரசு செயல்பட்டு வருகிறது. ஆனால், மத்திய அரசு மேற்கொள்ளக்கூடிய தவறான நடவடிக்கைகளுக்கும் தமிழக அரசு துணை நிற்கிறது என்றார் அவர். 
அப்போது, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் க.சந்தானம் உடனிருந்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com