ராமநாதபுரம் மாவட்டத்தில் ஓராண்டில் 8,000 மாமரக் கன்றுகள் நடவு: ஆட்சியர்

ராமநாதபுரம் மாவட்டத்தில் ஓராண்டில் 8 ஆயிரம் மாமரக் கன்றுகள் நடப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் எஸ்.நடராஜன் புதன்கிழமை தெரிவித்துள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் ஓராண்டில் 8,000 மாமரக் கன்றுகள் நடவு: ஆட்சியர்

ராமநாதபுரம் மாவட்டத்தில் ஓராண்டில் 8 ஆயிரம் மாமரக் கன்றுகள் நடப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் எஸ்.நடராஜன் புதன்கிழமை தெரிவித்துள்ளார்.
   ராமநாதபுரம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் வேளாண்மைத்துறை சார்பில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை ஆட்சியர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
   உச்சிப்புளி அருகே நாகாச்சியில் மருத்துவரும், விவசாயியுமான திருமலைவேலுவுக்குச் சொந்தமான மாமரத் தோப்பை பார்வையிட்ட பின்னர் ஆட்சியர் செய்தியாளர்களிடம் கூறியது:
  மாவட்டத்தில் ஓராண்டில் 8 ஆயிரம் மாமரக் கன்றுகள் நடப்பட்டுள்ளது. உச்சிப்புளி அருகே நாகாச்சி கிராமத்தில் தேசிய தோட்டக்கலை இயக்கத்தின் மூலம் திருமலைவேலுவின் வயலில் ஒரு மாமர கன்று ரூ.50 வீதம் 400 மாமர கன்றுகள் வழங்கப்பட்டு ஒராண்டு நிறைவு பெற்றுள்ளது.  இவை அனைத்தும் 3 ஆண்டுகளுக்கு பிறகு ஒரு மரத்துக்கு 50 கிலோ வீதம் காய்க்கத் தொடங்கும், பின்னர் அவை வளர்ச்சியடைந்து 8 ஆண்டுகள் முடிவில் ஒரு மாதத்துக்கு 500 முதல் 1000 கிலோ வரை கிடைக்கும். அவவாறு கிடைக்கும் மாங்காய்களை ஒரு கிலோ ரூ.100 வரை விற்கலாம். ஒவ்வொரு மாங்காயும் ஒரு கிலோ இருக்கும் வகையில் பெருத்து காய்க்கும். இதே விவசாயிக்கு 75 சதவீத மானியத்தில் சொட்டு நீர்ப்பாசனமும் அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளது.
  எனவே. விவசாயிகள் மாகன்றுகளை வாங்கி நடவு செய்து அதிக வருவாயை குறைந்த ஆண்டுகளில் பெறலாம். இது தவிர ஊடுபயிராக தானியங்களையும் பயிரிட்டால் கூடுதல் வருமானமும் கிடைக்கும் என்று தெரிவித்தார்.
  பேட்டியின் போது வேளாண்மை இணை இயக்குநர் ஆர்.அரிவாசன், ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(வேளாண்மை)வெள்ளைச்சாமி,தோட்டக்கலை அலுவலர் அழகேசன்,வேளாண்மை அலுவலர் அம்பேத்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com