சுற்றுச்சூழல் பாதிக்காத வகையில் இறால் பண்ணைகள் மேம்படுத்தப்படும்: மீன்வளர்ப்பு ஆராய்ச்சி நிறுவன முதன்மை விஞ்ஞானி பேச்சு

சுற்றுச்சூழல் பாதிக்காத வகையில் இறால் பண்ணைகள் மேம்படுத்தப்படும்: மீன்வளர்ப்பு ஆராய்ச்சி நிறுவன முதன்மை விஞ்ஞானி பேச்சு

ராமநாதபுரம் மாவட்டத்தில் சுற்றுச்சூழல் பாதிக்காத வகையில் இறால் பண்ணைகள் மேம்படுத்தப்படும் என மத்திய உவர்நீர் மீன்வளர்ப்பு ஆராய்ச்சி நிறுவனத்தின் முதன்மை விஞ்ஞானி மா.ஜெயந்தி தெரிவித்தார்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் சுற்றுச்சூழல் பாதிக்காத வகையில் இறால் பண்ணைகள் மேம்படுத்தப்படும் என மத்திய உவர்நீர் மீன்வளர்ப்பு ஆராய்ச்சி நிறுவனத்தின் முதன்மை விஞ்ஞானி மா.ஜெயந்தி தெரிவித்தார்.

ராமநாதபுரம் தாஜ் திருமண மண்டபத்தில் புதன்கிழமை மத்திய உவர்மீன் வளர்ப்பு ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் நடைபெற்ற இறால் வளர்ப்பு மேலாண்மையும் தட்ப வெட்ப மாறுதல்களும் என்ற தலைப்பிலான கருத்தரங்கிற்கு ஆராய்ச்சி நிறுவன முதன்மை விஞ்ஞானி மொ.முரளீதர் தலைமை வகித்தார். இதில், முதன்மை விஞ்ஞானி மா.ஜெயந்தி பேசியது:          தமிழகத்தில் 56 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவு விவசாயத்துக்கு பயன்படுத்த முடியாத நிலையிலும், மீன் வளர்ப்புக்கு ஏற்ற உவர்மண் நிறைந்த பகுதியாகவும் உள்ளது. இதில், 14 சதவீதம் மட்டும் பயன்பாட்டில் உள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் 271 கி.மீ. நீண்ட கடலோரப் பகுதியாகவும், இறால் மீன் வளர்ப்புக்கு உகந்த பகுதியாகவும் உள்ளது.

இவற்றில் சுற்றுச்சூழலை எந்த வகையிலும் பாதிக்காதவாறு தொலைநோக்குப் பார்வையுடன் அனைவருக்கும் உகந்த மீன் வளர்ப்பு, களிநண்டு வளர்ப்பு ஆகியவற்றுக்கு ஏற்ற இடங்களை தேர்வு செய்து, அவற்றை அதிக அளவில் மீன் இனங்களை வளர்த்து உற்பத்தியாளர்கள் அதிக வருவாய் ஈட்ட வழிவகை செய்யப்படும். முக்கியமாக சுற்றுச்சூழலை பாதிக்காத வகையில் இறால் பண்ணைகள் அனைத்தும் மேம்படுத்தப்படும் என்றார்.

முன்னதாக, மீன்வளர்ப்பு ஆராய்ச்சி நிறுவன தொழில் நுட்ப அதிகாரி அ.நாகவேல் வரவேற்றார். இதில், தேசிய கடல்பொருள் ஏற்றுமதி வாணிபக் கழக துணை இயக்குநர் சி.எஸ்.சைன்குமார், ராமநாதபுரம் மீன்வளத் துறை துணை இயக்குநர் காசிநாத பாண்டியன், முதன்மை விஞ்ஞானி ஆர்.சரஸ்வதி, விஞ்ஞானிகள் குமரகுருவாசகம், என். லலிதா, எம்.மகேஷ் ஆகியோர் உள்பட பலர் கலந்து கொண்டனர். கருத்தரங்கில், இறால் மீன் பண்ணை உரிமையாளர்கள் 100க்கும் மேற்பட்டோரும் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com