பாம்புல்நாயக்கன்பட்டியில் 1008 திருவிளக்கு பூஜை

கமுதி அருகே பாம்புல்நாயக்கன்பட்டி கிராமத்தில் கரியமல்லம்மாள் கோயில் ஆடிப் பொங்கல் விழாவை முன்னிட்டு  1008 திருவிளக்கு பூஜை நடைபெற்றது.

கமுதி அருகே பாம்புல்நாயக்கன்பட்டி கிராமத்தில் கரியமல்லம்மாள் கோயில் ஆடிப் பொங்கல் விழாவை முன்னிட்டு  1008 திருவிளக்கு பூஜை நடைபெற்றது.
    கடந்த 4-ஆம் தேதி காப்புகட்டுதல், கொடியேற்றத்துடன் திருவிழா துவங்கியது.
  கரியமல்லம்மாள் அம்மனுக்கு நாள்தோறும் காலை, இரவில் சிறப்பு பூஜைகள், அலங்கார அபிசேகங்கள், விஷேச பூஜைகள் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.   வியாழக்கிழமை 7-ஆம் நாள் திருவிழாவை முன்னிட்டு 1008 திருவிளக்கு பூஜை நடைபெற்றது. அன்று இரவு அம்மனுக்கு பொங்கல் வைத்தல், கரகம் எடுத்தல்,  வாணவேடிக்கை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.  முக்கிய நிகழ்ச்சியாக  வெள்ளிக்கிழமை  காலை அக்கினி சட்டி, பால்குடம், சாக்குவேடம், சேத்தாண்டி வேடம், உள்ளிட்ட பல்வேறு நேர்த்தி கடன்களை பக்தர்கள் நிறைவேற்றினர். மதியம் பக்தர்களுக்கு அன்னதானம் நடைபெற்றது.  திருவிழாவிற்கான நிகழ்ச்சி ஏற்பாடுகளை பாம்புல்நாயக்கன்பட்டி கிராம நிர்வாகிகள், விழா கமிட்டியிட்டியினர் செய்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com