கூலித்தொழிலாளி சடலம் ஒப்படைப்பு: எஸ்பியிடம் குடும்பத்தினர் புகார்

திருப்புல்லாணி அருகே மர்மமான முறையில் இறந்த கூலித்தொழிலாளி சடலம் சனிக்கிழமை குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது

திருப்புல்லாணி அருகே மர்மமான முறையில் இறந்த கூலித்தொழிலாளி சடலம் சனிக்கிழமை குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.
குற்றவாளியை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என சனிக்கிழமை ராமநாதபுரம் எஸ்.பி. ஓம்பிரகாஷ் மீனாவை குடும்பத்தினர் சந்தித்து மனு அளித்தனர்.
ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி அருகே தினைக்குளத்தில் தனியார் வேவர் பிளாக் கம்பெனியில் கூலித் தொழிலாளியாக பணியாற்றி வந்த குமார்(40 ) மர்மமான முறையில் இறுந்து கிடந்தார். இது தொடர்பாக திருப்புல்லாணி போலீஸார் சந்தேகம் மரணம் என வழக்குப் பதிவு செய்திருந்தனர்.
இந்நிலையில் கணவர் குமாரை கழுத்தை அறுத்துக் கொலை செய்திருப்பதாக அவரது மனைவி கலாதேவி காவல் நிலையத்தில் புகார் செய்திருந்தார். இவ்வழக்கை கொலை வழக்காகவும், வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் குற்றவாளி கைது செய்யப்பட வேண்டும் எனவும் குடும்பம் வறுமையில் இருப்பதல் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் அதுவரை குமாரின் சடலத்தை பெற்றுக் கொள்ள மாட்டோம் எனவும் தெரிவித்திருந்தார்.
இதனால் பிரேத பரிசோதனை செய்த குமாரின் உடல் ராமநாதபுரம் தலைமை அரசு மருத்துவமனை பிரதே பரிசோதனைக் கிடங்கிலேயே வைக்கப்பட்டிருந்தது.
சனிக்கிழமை 2 ஆவது நாளாக உயிரிழந்த குமாரின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் பலரும் ராமநாதபுரம் எஸ்.பி.ஓம்பிரகாஷ்மீனாவை சந்தித்து சம்பந்தப்பட்ட கொலைக்குற்றவாளியை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் செய்ய வந்திருந்தனர். அவர்களது புகார்களைப் பெற்றுக் கொண்ட காவல்துறை அதிகாரிகள் பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகு அதன் முடிவுகளைப் பொறுத்து தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர்.
இதனைத் தொடர்ந்து குமாரின் சடலத்தை குடும்பத்தினர் பெற்றுக் கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com