முதுகுளத்தூர் அருகே நெற்கதிர்களைக் காக்க சேலை வேலி

முதுகுளத்தூர் பகுதியில் நெல் பயிர்கள் மகசூல் நிலையை அடைந்துள்ளதால், நெல் கதிர்களை காக்க விவசாயிகள் சேலையால் வேலி அமைத்துள்ளனர்.

முதுகுளத்தூர் பகுதியில் நெல் பயிர்கள் மகசூல் நிலையை அடைந்துள்ளதால், நெல் கதிர்களை காக்க விவசாயிகள் சேலையால் வேலி அமைத்துள்ளனர்.
   முதுகுளத்தூர் பகுதியில் தென்மேற்கு பருவமழையால் அதிகம் மழை கிடைக்கவில்லை. இருந்தபோதிலும் அப்போது பெய்தமழையை நம்பி நெல் விவசாயிகள் விதைப்பு பணியில் ஈடுபட்டனர். பின்னர் 
ஓரளவு மழை பெய்ததால், முதுகுளத்தூர் அருகே  சாம்பக்குளம், செல்வநாயகபுரம், சிறுகுடி, இந்திராநகர், உடையநாதபுரம், மொ.கடம்பன்குளம், வைத்தியனேந்தல் ஆகிய கிராமங்களில் நெல்பயிர்கள் வளர்ந்து மகசூல் நிலையை அடைந்துள்ளது. 
 இந்நிலையில், மகசூல் நிலையை அடைந்த நெற் கதிர்களை கால்நடைகள், பறவைகளிடமிருந்து காக்க சேலையால் வேலி அமைத்து, நிலங்களில்  கொடிகளை அமைத்துள்ளனர். நெல்பயிர் மகசூல் நிலையை அடைந்துள்ளதால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com