பயிர்க்காப்பீடு இழப்பீடு கோரி விவசாயிகள் சாலை மறியல்: 285 பேர் கைது

திருவாடானை அருகே சி.கே.மங்கலத்தில்பயிர்க்காப்பீடு இழப்பீடு தொகை வழங்கக்கோரிவெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்ட 285 விவசாயிகள் கைது செய்யப்பட்டனர்.

திருவாடானை அருகே சி.கே.மங்கலத்தில்பயிர்க்காப்பீடு இழப்பீடு தொகை வழங்கக்கோரிவெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்ட 285 விவசாயிகள் கைது செய்யப்பட்டனர்.
திருவாடானை தாலுகா முழுவதும் கடந்த ஆண்டு பயிர்க்காப்பீடு இழப்பீடு தொகை வருவாய் கிராமங்களுக்கு தகுந்தாவாறு 90 சதவீதம் வரை வழங்கபட்டுள்ளது.
இந்நிலையில் திருவாடானை தாலுகா மங்களக்குடி,வெள்ளையபுரம்,நீர்குன்றம்,ஆண்டாவூரணி,ஆர்எஸ் மங்கலம் உள்ளிட்ட 51 வருவாய் கிராமங்களுக்கு பயிர் காப்பீடு இழப்பீடு தொகை வழங்கப்படவில்லை. இழப்பீடு வழங்கக்கோரி அப்பகுதி விவசாயிகள் பல்வேறுகட்ட போராட்டங்கள் நடத்தியும் எந்தவித பயனும் இல்லை.
இந்நிலையில் வங்கியில்கடன்பெற்ற விவசாயிகளுக்கு 100சதவீதம் பயிர்க் காப்பீடு இழப்பீடு தொகை வழங்க வலியுறுத்தியும்,இதுவரை இழப்பீடு கிடைக்காத விவசாயிகளுக்கு இழப்பீடு தொகை வழங்க வலியுறுத்தியும் தமிழ்நாடு விவசாய சங்கம் சார்பில்சிகே மங்கலத்தில் திருச்சி-ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.இதில் இதில் சங்கத்தின் மாவட்ட தலைவர் முத்துராமு தலைமைவகித்தார். தாலுகா தலைவர் முருகன்,தாலுகா செயலாளர் சேதுராமு,துணைத் தலைவர் நாகநாதன் ஆகியோர் முன்னிலைவகித்தனர். இதில் நூற்றுக்கணகான விவசாயிகள் கலந்து கொண்டனர்.
மறியலில் ஈடுபட்ட 285 பேரைகாவல்துறையினர் கைது செய்து வேனில் கொண்டு சென்றுதனியார் மண்டபத்தில் அடைத்தனர்.தொடர்ந்து மாலையில்அவர்கள்விடுவிக்கப்பட்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com