கண்மாய்களில் கருவேல மரங்கள்: கமுதி விவசாயிகள் கவலை

கமுதி பகுதிகளில் உள்ள கண்மாய்களில் ஆக்கிரமித்துள்ள கருவேல மரங்களை அகற்ற விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கமுதி பகுதிகளில் உள்ள கண்மாய்களில் ஆக்கிரமித்துள்ள கருவேல மரங்களை அகற்ற விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் உள்ள 53 ஊராட்சிகளில் 254 ஊராட்சி ஒன்றிய கண்மாய்களும், 485 ஊராட்சி கண்மாய்களும், 50க்கும் மேற்பட்ட வனத்துறைக்கு சொந்தமான பெரிய, சிறிய கண்மாய்கள் என 350 க்கும் மேற்பட்ட கண்மாய்கள் உள்ளன.இந்த கண்மாய்கள் மூலம் 20 ஆயிரத்திற்கும் அதிகமான ஏக்கர் பரப்பளவில் நெல்,மிளகாய், பருத்தி, மல்லி உள்ளிட்ட பயிர்களை விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனார். இந்நிலையில் கடந்த பல வருடங்களாக கமுதி பகுதிகளில் உள்ள கண்மாய்களில் கருவேல மரங்கள் அடர்ந்து வளர்ந்துள்ளன.மேலும் கண்மாய்களுக்கு வரும் வரத்துக்கால்வாய்களும்புதர்மண்டி தூர்ந்து போய்விட்டதால் அவ்வப்போது பெய்கின்ற மழை நீரையும் தேக்கி வைத்து விவசாயத்திற்கு பயன்படுத்த முடியாத நிலை உள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர்.
இந்த கருவேல மரங்கள் நிலத்தடி நீரை உறிஞ்சிவிடுவது மட்டுமல்லாது மண்வளத்தையும் மலட்டுத்தன்மையாக மாற்றுவதால் கடந்த சில வருடங்களாக 300 அடிகளுக்குமேல் ஆழ்துளைக் கிணறுகள் அமைத்து விவசாயத்திற்கு தண்ணீரை பயன்படுத்தி வந்தனர். ஆனால் தற்போது 1000 அடிக்கு மேல்ஆழ்துளைக் கிணறு அமைத்தாலும் விவசாயத்திற்கு தண்ணீர் கிடைப்பதில்லை என விவசாயிகள் கவலை தெரிவித்தனர். இதனால் விவசாயத்திற்காக விளை நிலங்களில் புதிதாக அமைத்தஆழ்துளைக் கிணறுகளுக்கு கூடுதல் செலவானதாக கூறினர். இதற்கு கருவேல மரங்களை அகற்றி கால்வாய்கள்தூர்வரப்படாமல் அதிகாரிகள் அலட்சியமாக இருப்பதே காரணம் என்று விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனர்.எனவே விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு மாவட்ட நிர்வாகம்விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர். 
இதுகுறித்து கமுதி ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் தங்கப்பாண்டியன் கூறியதாவது: கமுதி பகுதியில் குடிமராமத்து திட்டத்தின் கீழ் 150 கண்மாய்களுக்கும், தாய்திட்டத்தின் கீழ் 6 கண்மாய்களுக்கும் நிதி ஒதுக்கி கருவேலமரங்களை அகற்றியுள்ளோம்.
மேலும் சில மாதங்களுக்கு முன்னால் வெளியான நீதிமன்ற தீர்ப்பின் காரணமாக கண்மாய்களில் உள்ள கருவேல மரங்களைஅகற்றுவதில் தாற்காலிகமாகதாமதம் ஏற்பட்டுள்ளது.இதற்கான ஆணைவந்தவுடன் கருவேல மரங்கள் அகற்றும் பணி மீண்டும் நடைபெறும் என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com