நவ.30 கடைசி நாள்: பயிர்க்காப்பீடு செய்ய கூட்டுறவு சங்கங்கள், வங்கிகள் மறுப்பு: திருவாடானை விவசாயிகள் புகார்

திருவாடானை தாலுகாவில் விவசாயிகள் பயிர்க் காப்பீடு செய்ய கூட்டுறவு சங்கங்கள், வங்கிகள்,கிராம நிர்வாக அலுவலர்கள் மறுத்து வருவதாக புகார் கூறப்படுகிறது.

திருவாடானை தாலுகாவில் விவசாயிகள் பயிர்க் காப்பீடு செய்ய கூட்டுறவு சங்கங்கள், வங்கிகள்,கிராம நிர்வாக அலுவலர்கள் மறுத்து வருவதாக புகார் கூறப்படுகிறது.
திருவாடானை தாலுகா ஒரு லட்சத்து 50ஆயிரம் ஹெக்டேர் நிலப் பரப்பளவில் நெல் விவசாயம்நடைபெறும் பகுதியாக உள்ளது. நடப்பு சம்பா பருவத்தில் விவசாயிகள் சுமார் 42ஆயிரம் ஹெக்டேர் நிலப்பரப்பளவில் நேரடி நெல் விதைப்பில் ஈடுபட்டுள்ளனர்.கடந்த ஆண்டைப்போல் இந்த ஆண்டு பருவ மழை சரிவர பெய்யாததால் விவசாயிகள் பயிர்க் காப்பீடு செய்ய தீவிரம் காட்டியுள்ளனர்.கடந்த ஆண்டு பயிர்க் காப்பீடு இழப்பீடு தொகை இன்னும் சில பகுதிகளுக்கும் கடன் பெற்ற விவசாயிகளுக்கு கிடைக்காத நிலையில் விவசாயிகள் இந்த ஆண்டு பயிர் காப்பீடு செய்ய கூட்டுறவு சங்கங்கள்,வங்கிகள் மறுத்து வருவதாக விவசாயிகள் புகார் தெரிவித்தனர்.
இது குறித்து கீழக்குடியை சேர்ந்த விவசாயி சுந்தர்ராஜன் கூறியது:
பயிர்க்காப்பீடு செய்ய பத்து ஒண்ணுநகல்,சிட்டா, அடங்கல்வாங்குவதற்காக கிராம நிர்வாக அலுவலரிடம் சென்றால் 15ஆம் தேதிக்குபிறகுவாருங்கள் என்று கூறுகின்றனர்.மாவட்ட நிர்வாகமோ நவம்பர் 30ஆம் தேதி கடைசி நாள் என்று அறிவித்துள்ளது.
கூட்டுறவு சங்க அதிகாரிகள்நவம்பர் 20ஆம்தேதி கடைசி தேதி என்று தெரிவித்தனர்.
கடந்த ஆண்டு பயிர்க்காப்பீடு செய்ய பட்டா,சிட்டா,அடங்கல் போதுமானதாக இருந்தது.அதை வைத்து கூட்டுறவு சங்கங்களில் காப்பீடுக்குபதிவு செய்தனர்.
இந்த ஆண்டு சிட்டா,பட்டா,அடங்கல்,சிறப்புஅடங்கல்,மத்திய கூட்டுறவு வங்கிக்கணக்கு எண்,ஆதார் எண்எனமேலும் ஆவணங்கள் கேட்கின்றனர். பயிர்க்காப்பீடு செய்ய குறைந்த நாள்களே உள்ள நிலையில் கூட்டுறவு சங்கங்கள் மற்றும்வங்கிகளைச் சேர்ந்தஅதிகாரிகள் உடனடியாக பயிர்க்காப்பீடு செய்ய மாவட்ட நிர்வாகம் தகுந்தநடவடிக்கை எடுக்க வேண்டும்என்றார்.
 இது குறித்து விவசாய சங்க தாலுகா செயலாளர் கூறுகையில்,கடந்த ஆண்டு இதே போல் அரசு அதிகாரிகள்,வங்கி,கூட்டுறவு சங்க அதிகாரிகள்செய்தகுளறுபடியால் தாலுகா முழுதும் 51 வருவாய் கிராமங்களுக்கும்,கடன் பெற்ற விவசாயிகளுக்கும் இது வரை பயிர்க்காப்பீடு இழப்பீடு தொகை வழங்கபடவில்லை. இது குறித்து உண்ணா விரதம், சாலை மறியல்,முற்றுகை என பல்வேறு கட்ட போராட்டம் நடத்தியும் இதுவரை வழங்கப்படவில்லை.
அதே போல் இந்த ஆண்டும் குறைந்த நாள்களே உள்ள நிலையில்பயிர் காப்பீடு செய்ய வங்கிகள்,கூட்டுறவு சங்கங்கள் மருத்து வருகின்றன.
 எனவே விவசாயிகளை அலைக்கழிப்பு செய்யாமல் மாவட்ட அதிகாரிகளுக்கும் வங்கிகள், கூட்டுறவு சங்க அதிகாரிகளுக்கும் சரியான வழிகாட்டுதல் மற்றும் உத்தரவுகளை வழங்க வேண்டும். மேலும் தக்க நடவடிக்கை எடுத்து சிறப்பு கவுண்டர் திறந்து விவசாயிகளின் கூட்டத்தை கட்டுப்படுத்தி பயிர்க்காப்பீடு செய்ய வழிவகை செய்ய வேண்டும் எனமாவட்ட நிர்வாகத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com