உயர்நீதிமன்ற உத்தரவையும் மீறி முதுகுளத்தூர் அருகே அரங்கேறும்ஊரை விட்டு ஒதுக்கி வைக்கும் சம்பவம்

உயர்நீதிமன்ற உத்தரவையும் மீறி முதுகுளத்தூர் அருகே ஏதேனும் ஒரு குடும்பத்தாரை சில ஆண்டுகளுக்கு ஊரை விட்டு ஒதுக்கி வைக்கும் சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன.

உயர்நீதிமன்ற உத்தரவையும் மீறி முதுகுளத்தூர் அருகே ஏதேனும் ஒரு குடும்பத்தாரை சில ஆண்டுகளுக்கு ஊரை விட்டு ஒதுக்கி வைக்கும் சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன.
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே மேலச்சிறுபோது எஸ்.குளம் கிராமத்தில் சுமார் 200-க்கும் மேற்பட்ட யாதவர் சமுதாயத்தினர் வசித்து வருகின்றனர். இக்கிராமத்தில் அண்மையில் நடக்க இருந்த உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக இரு தரப்பினர் செயல்பட்டனர். இதில் வாக்கு வாதம் ஏற்பட்டதில் இளஞ்செம்பூர் காவல் நிலையத்தில் ஒரு தரப்பினர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனர். இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் நாச்சியப்பன் இவரது மனைவி காளியம்மாள் குடும்பத்தினர் மீது யாரும் பேசக்கூடாது. இல்ல விழாக்களில் கலந்து கொள்ள கூடாது என ஊரை விட்டு ஒதுக்கி வைத்துள்ளனர்.
இந்நிலையில் நாச்சியப்பன் மனைவி காளியம்மாள் உடல்நிலை சரியில்லாமல் திங்கள்கிழமை இறந்து விட்டார். இறப்பினை அறிந்த அவரது உறவினர் மற்றும் கிராமத்தினர் இறப்பிற்கு செல்லக்கூடாது. அப்படி மீறி சென்றால் அவர்களையும் ஒதுக்கி வைப்பதாகக் கூறியுள்ளனர். இதனால் கிராம மக்கள் யாரும் இறந்தவரின் வீட்டிற்கு செல்லவில்லை. இதனால் இரவு முழுவதும் இறந்தவரின் உடலை குளிப்பாட்ட கூட ஆள் இல்லாமல் தனியாக அக்குடும்பத்தினர் மட்டும் இருந்துள்ளனர். மறுநாள் காலையில் செவ்வாய்கிழமை தகவல் அறிந்த  முதுகுளத்தூர் டி.எஸ்.பி ரவி  போலீஸாருடன் சென்று கிராம மக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார். பின் இறந்த காளியம்மாள் உடலுக்கு இறுதிச்சடங்கு நடைபெற்றது. கிராமத்தில் யாரையும் ஊரைவிட்டு ஒதுக்கி வைக்கக் கூடாது என சமீபத்தில் ஐகோர்ட் தீர்ப்பு வழங்கியும் ஒரு சில கிராமங்களில் இதுபோன்ற வன்கொடுமை நடந்து கொண்டே இருக்கிறது. இதனை ஆய்வு செய்து சட்டத்தை மீறுபவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com