பயிர்க் காப்பீட்டுக்கு நவ. 25 கடைசிநாள்: ஆட்சியர்

நெற்பயிருக்கான காப்பீடு செய்ய விரும்பும் விவசாயிகள் நவ. 25 ஆம் தேதிக்குள் காப்பீடு செய்து கொள்ளுமாறு ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் எஸ். நடராஜன் தெரிவித்துள்ளார்.

நெற்பயிருக்கான காப்பீடு செய்ய விரும்பும் விவசாயிகள் நவ. 25 ஆம் தேதிக்குள் காப்பீடு செய்து கொள்ளுமாறு ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் எஸ். நடராஜன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
  ராமநாதபுரம் மாவட்டத்தில் 1,25,000 ஹெக்டேர் பரப்பளவில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தற்போது களைக்கொல்லி மற்றும் உரம் இடும் பணிகள் நடந்து வருகிறது. வடகிழக்குப் பருவமழை இதுவரை குறைவாகவே பெய்திருப்பதால் விவசாயிகள் பிரதம மந்திரியின் பயிர்க்காப்பீட்டுத் திட்டத்தில் பயிர் காப்பீடு செய்து வருகின்றன. இதுதொடர்பாக மாவட்டத்தில் உள்ள அனைத்து வருவாய் கிராமங்களிலும் மூவிதழ் அடங்கல் கிராம நிர்வாக அலுவலரால் வழங்கப்பட்டு வருகிறது.
எனவே காப்பீடு செய்ய விருப்பமுள்ள விவசாயிகள் சம்பந்தப்பட்ட தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள், வணிக வங்கிகள் இவற்றில் ஒரு ஏக்கருக்கு பிரிமியத் தொகையாக ரூ. 332 செலுத்தி காப்பீடு செய்து கொள்ளலாம்.
தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கங்களில் காப்பீடு செய்ய விருப்பமுள்ளவர்கள் கண்டிப்பாக மத்திய கூட்டுறவு வங்கிக் கிளையில் கணக்கு வைத்திருக்க வேண்டும். அவ்வாறு கணக்கு இல்லாதவர்கள் உடனடியாக சேமிப்புக் கணக்கு தொடங்கவும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.
மேலும் இந்திய வேளாண் காப்பீட்டு நிறுவனத்தால் காப்பீடு செய்ய நிர்ணயிக்கப்பட்ட கடைசி நாள் 30.11.2017 ஆக இருந்தாலும் அனைத்து ஆவணங்களும் காப்பீட்டு நிறுவனத்துக்கு அத்தேதிக்குள் அனுப்ப வேண்டியது இருப்பதால் இம்மாதம் 25 ஆம் தேதிக்குள் காப்பீடு செய்யும் பணியினை முடிக்க வேண்டும்.
எனவே இம்மாதம் 25 ஆம் தேதியே பயிர்க்காப்பீடு செய்ய கடைசி நாளாகும். இந்த வாய்ப்பை விவசாயிகள் நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com