பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் நினைவிடத்தை நாள்தோறும் பராமரிக்க அரசுக்கு கோரிக்கை

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தை நாள்தோறும் பராமரிக்க அரசு ஏற்பாடு செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தை நாள்தோறும் பராமரிக்க அரசு ஏற்பாடு செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
   ராமநாதபுரம் மாவட்டம் கமுதியை அடுத்துள்ள பசும்பொன்னில் சுதந்திரப் போராட்ட வீரர் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் நினைவிடம் உள்ளது. இங்கு  ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் 28,29,30
ஆகிய தேதிகளில் குருபூஜை விழாவும், ஜெயந்தி விழாவும் நடைபெறுகிறது. இதில், அக்.30-ஆம் தேதி அரசு விழாவாக கொண்டாடப்படுகிறது. இந்நிகழ்சிக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து பொதுமக்கள் மற்றும் பல்வேறு கட்சித் தலைவர்கள் என பல லட்சம் பேர் கூடுவார்கள். பெண்கள் முளைப்பாரி பால் குடம் எடுத்தும், இளைஞர்கள் ஜோதி ஏந்தியும் முத்துராமலிங்கத் தேவரை வணங்கிச் செல்வார்கள்.  
  மற்ற நாள்களில் வெளி மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களில் இருந்தும் பொதுமக்கள் தேவர் நினைவிடத்திற்கு வந்து சாமி கும்பிட்டு, நேர்த்திக்கடன் செலுத்தி விட்டு செல்கிறார்கள். இதற்காக அரசு சார்பில் பசும்பொன் கிராமத்திற்கு தார் சாலைகள், புதிய வழித் தடங்கள், உயர் கோபுர மின்விளக்குகள், அணையா விளக்கு, பேவர்பிளாக் சாலைகள், முடிக்காணிக்கை செலுத்துமிடம், தண்ணீர் வசதியுடன் கூடிய கழிப்பறைகள், காவல் கட்டுப்பாட்டு அறைகள், தியான மண்டபம், நூலகங்கள் உள்ளிட்ட வசதிகள் உருவாக்கப்பட்டன.
  ஆனால், அக்டோபர் மாதம் தேவர் குருபூஜை நெருங்கும் போது மட்டுமே இவை சீரமைக்கப்பட்டு புதுப் பொலிவுடன் காட்சி தருகிறது. மற்ற நாள்களில் பராமரிக்கப்படாமல் சேதமடைந்த நிலையில் காணப்படுகிறது.
 சாதாரண நாள்களில் இங்குள்ள மின் விளக்குகள், அணையா விளக்கு எரிவதே இல்லை. மேலும் நூலக கட்டிடம், கழிப்றைகள், தியான மண்டபம் ,கூட்ட அரங்கம் உள்ளிட்டவை  சுத்தம் இல்லாமல் ஆடு, மாடுகள் வளர்க்கும் இடமாகவும், மதுப் பிரியர்களின் கூடாரமாகவும் மாறி விடுகிறது.
  எனவே தமிழக அரசும்,  மாவட்ட நிர்வாகமும் பசும்பொன் தேவர் நினைவிடத்தை நிரந்தரமாக சீரமைத்து நாள்தோறும் பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com