'மு.க.ஸ்டாலினின் எழுச்சிப் பயணம் வீழ்ச்சி பயணமாக அமையும்'

திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் நடத்த உள்ள எழுச்சிப் பயணம், வீழ்ச்சி பயணமாக அமையும் என தமிழக தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர் மு.மணிகண்டன் பேசினார்.

திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் நடத்த உள்ள எழுச்சிப் பயணம், வீழ்ச்சி பயணமாக அமையும் என தமிழக தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர் மு.மணிகண்டன் பேசினார்.
ராமநாதபுரம் அரண்மனை முன் அதிமுக சார்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பொதுக்கூட்டத்துக்கு மாவட்டச் செயலர் எம்.ஏ.முனியசாமி தலைமை வகித்தார்.
இக்கூட்டத்தில் கலந்து கொண்டு அமைச்சர் மு.மணிகண்டன் பேசியதாவது: திமுக ஆட்சிக் காலத்தில் கேபிள் டி.வி.நிறுவனம் ரூ.4 கோடி நஷ்டத்தில் இயங்கியது. ஆனால் இன்று ரூ.200 கோடி வருவாய் கிடைக்கிறது. லாபம் மட்டும் ரூ.53 கோடி வந்துள்ளது.
இதுவரை 12 லட்சம் 'செட்டாப் பாக்ஸ்கள்' வழங்கப்பட்டு விட்டன. மேலும் 70 லட்சம் செட்டாப் பாக்ஸ்கள் வரவுள்ளன. அவற்றை வீடுகளில் நிறுவ ரூ.200 கட்டணம் செலுத்தினால் போதும். இந்த செட்டாப் பாக்ஸ்களை இலவசமாகத் தான் வழங்க வேண்டும். கேபிள் டி.வி.நிறுவனத்தினர் கூடுதலாக கட்டணம் வசூலிப்பது குறித்து புகார் வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், முன்னர் நமக்கு நாமே திட்டம் என்று பெயர் வைத்துக் கொண்டு தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து மக்களை சந்தித்தார். ஆனால் மக்களோ அவரையும், அவரது தந்தையையும் வீட்டுக்குத் தான் அனுப்பினார்கள். அதே போல எழுச்சிப் பயணம் என்று பெயர் வைத்துக் கொண்டு மீண்டும் மக்களை சந்திக்கப் போவதாக ஸ்டாலின் சொல்லிக் கொண்டிருக்கிறார். எழுச்சிப்பயணம் வீழ்ச்சிப் பயணமாகவே அமையும். ஆட்சியை எப்படியாவது கலைத்து விட வேண்டும், குழப்பம் ஏற்படுத்த வேண்டும் என்று ஸ்டாலின் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறார். ஆனால் ஜெயலலிதா ஆட்சியில் இருந்தபோதும், மறைந்த பிறகும் கூட அவரால் ஆட்சியை கலைக்க முடியவில்லை. சிலருடன் கூட்டணி சேர்ந்து கொண்டு ஆட்சியை கலைக்க முயற்சிக்கிறார். அது ஒரு போதும் நடக்காது என்றார்.
முன்னதாக கூட்டத்துக்கு ராம்கோ தலைவர் செ.முருகேசன், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் தலைவர் ஜெயஜோதி, மாவட்ட மாணவரணித் தலைவர் மணிகண்டன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர் செயலர் எஸ்.அங்குச்சாமி வரவேற்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com