கமுதியில்27 ஆண்டுகளாக சீரமைக்கப்படாத அரசு கூட்டுறவு பால் குளிரூட்டும் நிலையம்

கமுதி கண்ணார்பட்டியில் சேதமடைந்து இடிந்த அரசு கூட்டுறவு பால் குளிரூட்டும் நிலையம் 27 ஆண்டுகளாகியும் சீரமைக்கப்படாததால் தனியாரிடம் குறைந்த விலைக்கு பாலை விற்கும் அவலத்திற்கு விவசாயிகள்


தனியாரிடம் குறைந்த விலைக்கு பாலை விற்கும் அவலம்
கமுதி கண்ணார்பட்டியில் சேதமடைந்து இடிந்த அரசு கூட்டுறவு பால் குளிரூட்டும் நிலையம் 27 ஆண்டுகளாகியும் சீரமைக்கப்படாததால் தனியாரிடம் குறைந்த விலைக்கு பாலை விற்கும் அவலத்திற்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர்.
கமுதி கண்ணார்பட்டியில் 1982-இல், ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் அரசு பால் கூட்டுறவு உற்பத்தி நிலையத்தை கொள்முதல் செய்யும் பாலினை குளிரூட்டும் வசதியுடன் செயல்படுத்தப்பட்டது. இதில் விவசாயிகளிடம் நேரடியாக பால் கொள்முதல் செய்யபட்டு அரசுக்கும், பொதுமக்களுக்கும் குறைந்த விலையில் பால் விற்பனை செய்யப்பட்டது. குளிரூட்டும் நிலையத்தை பராமரிக்க போதிய நிதி ஒதுக்கீடு இல்லாததால் பால் கொள்முதல் நிலையம் சேதமடைந்து, இயந்திரங்கள் பழுதாகி, வீணடிக்கபட்டுள்ளது. 27 ஆண்டுகளாகியும் சேதமடைந்த கட்டடத்திற்கு பதில் புதிய கட்டடம் கட்டாமல் உள்ளதால், விவசாயிகள் அரசு பால் உற்பத்தி கொள்முதல் நிலையத்தில் பாலினை விற்பனை செய்ய முடியாமல் தனியாரிடம் குறைந்த விலைக்கு விற்பனை செய்து இழப்பீட்டை சந்தித்து வருகின்றனர். இங்கு பணியாற்றிய காவலர்கள் 27 ஆண்டுகளாக பரமக்குடி, காரைக்குடி பால் உற்பத்தி நிலையங்களில் பணியாற்றி வருகின்றனர்.
இதுகுறித்து கண்ணார்பட்டி மலைச்சாமி கூறியதாவது: ராமநாதபுரம் மாவட்டத்தில் கமுதி கண்ணார்பட்டியில் 32 ஆண்டுகளுக்கு முன் பால் கொள்முதல், குளிரூட்டும் நிலையம் அமைக்கபட்டு, விவசாயிகளிடமிருந்து நேரடியாக அரசு நிர்ணயித்த விலைக்கு பால் கொள்முதல் செய்யபட்டடது. இதனால் அரசு மானியம், உரிய விலை விவசாயிகளுக்கு நேரடியாக கிடைத்தது. பால் குளிரூட்டும் நிலையத்தை முறையாக பராமரிக்க, அரசு வருவாய் இருந்தும் நிதி ஒதுக்கீடு இல்லாததால், கட்டடம் சேதமடைந்து இடிந்து விழுந்துள்ளது. குளிரூட்டும் இயந்திரமும் சேதமடைந்து அரசு நிதி வீணடிக்கபட்டுள்ளது. கமுதியில் பால் குளிரூட்டும் நிலையத்திலிருந்து பால் கொள்முதல் செய்யாததால், தனியார் கூட்டுறவு சங்கத்திலிருந்து பால் கொள்முதல் செய்து, லிட்டர் 33 ரூபாய்க்கு கொள்முதல் செய்து, கமுதியிலே 40- க்கும், வெளியூர்களில் 50 முதல் 60 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. பசு மாட்டு பாலிற்கு மவுசு ஏற்பட்டுள்ளதால் தற்போது தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனை கருத்தில் கொண்டு தனியார் கூட்டுறவு சங்கங்கள் மூலமாக விவசாயிகளிடம் குறைந்த விலைக்கு கொள்முதல் செய்து அதிக விலைக்கு விற்பனை செய்யபடுகிறது. இதனால் விவசாயிகள் இழப்பை சந்தித்துள்ளனர். ஆகவே முடங்கிய கமுதி கண்ணார்பட்டி பால் கொள்முதல், குளிரூட்டும் நிலையத்தை செயல்பட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com