காணிக்கூர், மங்களத்தில் மாட்டு வண்டி பந்தயம்

கமுதி அருகே காணிக்கூர் கிராமத்தில் தென் மாவட்ட அளவிலான மாட்டு வண்டி பந்தயம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கமுதி அருகே காணிக்கூர் கிராமத்தில் தென் மாவட்ட அளவிலான மாட்டு வண்டி பந்தயம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
மூவேந்தர் முன்னேற்ற கழக நிறுவனத் தலைவர் வாண்டையார் 62 -ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு இப்பந்தயம் நடைபெற்றது.
இநிகழ்ச்சியில் ராமநாதபுரம், திருநெல்வேலி,தூத்துக்குடி, சிவகங்கை, மதுரை, விருதுநகர் உள்ளிட்ட தென் மாவட்டங்களில் இருந்து வண்டி மாடுகள் வந்திருந்தன. பெரிய மாட்டு வண்டி, சின்ன மாட்டு வண்டி என இரண்டு பிரிவுகளாக பந்தயங்கள் நடைபெற்றன.
இதில் பெரிய மாட்டு வண்டி பந்தயத்தில் 7 மாட்டு வண்டிகளும், பந்தய வீரர்களும், சின்ன மாட்டு வண்டி பந்தயத்தில் 13 மாட்டு வண்டிகள், பந்தய வீரர்கள் என 20 மாட்டு வண்டி பந்தய வீரர்கள் போட்டியில் கலந்து கொண்டனர். முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாட்டு வண்டி பந்தய வீரர்களுக்கு ரொக்கப் பணம், குத்துவிளக்கு உள்ளிட்ட பரிசுகள் வழங்கபட்டன.
இந்த பந்தயத்தை தூத்துக்குடி, திருநெல்வேலி, ராமநாதபுரம், விருதுநகர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டத்தினர் ஆர்வமுடன் பார்வையிட்டனர்.
முதுகுளத்தூர்: கடலாடி அருகே மங்களத்தில் கோயில் திருவிழாவை முன்னிட்டு வெள்ளிக்கிழமை மாட்டு வண்டிப் பந்தயம் நடைபெற்றது.
கிராமத்தில் அமைந்துள்ள சிவன், ரேணுகாம்மாள், செல்விஅம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு சின்னமாடு, பெரியமாடு என இரண்டு பிரிவுகளாக பந்தயம் நடைபெற்றது. இதில் பெரிய மாட்டில் 10 ஜோடிகளும், சின்னமாட்டில் 8 ஜோடிகளும் கலந்து கொண்டன. பெரிய மாடு மங்களத்தில் ஆரம்பித்து ஆப்பனூர் இளையனை கொட்டகை வரை 10 கி.மீ. தூரம் எல்லை நிர்ணயம் செய்யப்பட்டது. சின்னமாடு மங்களத்தில் இருந்து ஏ.புனவாசல் வரை 8 கி.மீ.தூரம் வரை எல்லை நிர்ணயம் செய்யப்பட்டது. இதில் பெரிய மாட்டில் தூத்துக்குடி புதூர் விஜயக்குமார் மாடு முதல் பரிசினையும்,தூத்துக்குடி சிங்கிலிபட்டி பிரதிக்ஷா இரண்டாவது பரிசும்,ஏனாதி பூங்குளத்தான் மாடு மூன்றாவது பரிசும் பெற்றன.
சின்னமாட்டு வண்டி பந்தயத்தில் ஏனாதி பூங்குளத்தான் மாடு முதல் பரிசும்,மேலச்செல்வனூர் சத்தியமூர்த்தி மாடு இரண்டாவது பரிசும்,தூத்துக்குடி புதூர் கிருஷ்ணமூர்த்தி மாடு மூன்றாவது பரிசும் பெற்றன. வெற்றி பெற்ற மாட்டு வண்டி உரிமையாளர்களுக்கு குத்துவிளக்கும் ஊக்கத்தொகையும் பரிசாக வழங்கினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com