ரெகுநாதபுரம் வல்லபை ஐயப்பன் கோயிலில் மகா கும்பாபிஷேகம்: சபரிமலை ஐயப்பன் கோயில் தலைமைக் குருக்கள் நடத்தி வைத்தார்

ராமநாதபுரம் அருகே ரெகுநாதபுரம் வல்லபை ஐயப்பன் கோயிலில் வெள்ளிக்கிழமை மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

ராமநாதபுரம் அருகே ரெகுநாதபுரம் வல்லபை ஐயப்பன் கோயிலில் வெள்ளிக்கிழமை மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
மகா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கோயில் புதுப்பிக்கப்பட்டு கோயிலில் உள்ள அனைத்து பரிவார தெய்வ விக்ரகங்களும் புதிதாக பிரதிஷ்டை செய்யப்பட்டன. கோயில் மேற்கூரை, மூலவர் முன்பாக 18 படிகள் ஆகியவற்றுக்கு தங்க முலாம் பூசப்பட்டது. மகா கும்பாபிஷேகம் தொடர்பான யாக சாலை பூஜைகள் கடந்த செப். 11 ஆம் தேதி முதல் நடைபெற்றுவந்தன. தினசரி இரவு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இந்நிலையில் வெள்ளிக்கிழமை மகா கும்பாபிஷேகத்தை சபரிமலை ஐயப்பசுவாமி திருக்கோயில் தலைமைக் குருக்கள் கண்டரு ராஜூவரு தந்திரி நடத்தி வைத்தார். பின்னர் மூலவருக்கும்,பரிவார தெய்வங்களுக்கும் சிறப்பு அபிஷேகமும், விசேஷ தீபாராதனைகளும் நடத்தப்பட்டன.
கும்பாபிஷேக விழாவிற்கு கோயில் குருவடியார் மோகன் சுவாமிகள் தலைமையில் ஐயப்ப பக்தர்கள் ஏற்பாடுகளை செய்திருந்தனர். மதியம் அன்னதானம் நடைபெற்றது. குருவடியார் கூறுகையில், சபரிமலையில் உள்ளதைப் போன்றே 33 அடி உயர தங்கக் கொடிமரம் வடிவமைக்கப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடந்து முடிந்திருப்பதாக தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com