ராமநாதபுரம் தமிழ் சங்கத்தில் முப்பெரும் விழா

ராமநாதபுரம் தமிழ் சங்கத்தின் சார்பில், தமிழ் புத்தாண்டு தின விழா, பாவேந்தர் பாரதிதாசன் விழா, உலகப் புத்தக நாள் விழா என முப்பெரும் விழா ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது.

ராமநாதபுரம் தமிழ் சங்கத்தின் சார்பில், தமிழ் புத்தாண்டு தின விழா, பாவேந்தர் பாரதிதாசன் விழா, உலகப் புத்தக நாள் விழா என முப்பெரும் விழா ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது.
      இந்த விழாவுக்கு, சங்கத்தின் துணைத் தலைவர் வைகிங் எம்.எஸ். கருணாநிதி தலைமை வகித்தார். சங்கத் தலைவர் மை. அப்துல்சலாம் விழாவை அறிமுகம் செய்து வைத்தும், வரவேற்றும் பேசினார். 
     பின்னர், புதியதோர் உலகம் செய்வோம் என்ற தலைப்பில், சங்கச் செயலர் டாக்டர் பொ. சந்திரசேகரன் தலைமையில் கவியரங்கம் நடைபெற்றது. கவிஞர்கள் மானுடப்பிரியன் (செம்மொழி காக்க), செ. அழகேந்திரன் (இயற்கை செழிக்க), நா. ஜெயராமன் (இல்லறம் மலர), நா. வேலுச்சாமி துரை (உழைப்பு சிறக்க) என்ற தலைப்புகளில் கவிதை வாசித்தனர். தொடர்ந்து, புத்தகம் படிப்போம் என்ற தலைப்பில், பரமக்குடி கே. செந்தில்குமார் பேசினார்.
    கவிஞர் அன்வர் உசேனின் அன்பின் கவிதை என்ற நூலும் வெளியிடப்பட்டது. நூலின் முதல் பிரதியை, தமிழ் சங்க மகளிர் அணியின் தலைவி டாக்டர் மதுரம் அரவிந்தராஜ் வெளியிட, அதனை தொழிலதிபர் காபத்துல்லா பெற்றுக் கொண்டார். இதனையடுத்து, பாட்டும் பரதமும் என்ற தலைப்பில், மௌனிகாவின் பரதநாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது.
    நிறைவாக, பாடகர் ரெ. வாசு நடுவராக இருந்து, வாழ்க்கை ஒரு பூந்தோட்டமா அல்லது போராட்டமா என்ற தலைப்பில் நகைச்சுவைப் பட்டிமன்றம் நடைபெற்றது. வாழ்க்கை போராட்டமே என்ற தலைப்பில் நடுவர் தீர்ப்பு வழங்கிப் பேசினார்.
 கவிஞர் செ. மாணிக்கவாசகம் நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com