சேதமடைந்த காவிரி கூட்டுக் குடிநீர் குழாயை சீரமைக்க கோரிக்கை

கமுதி அருகே காவிரி கூட்டுக் குடிநீர் செல்லும் ராட்சத குழாய் சேதமடைந்துள்ளதால், 200-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு குடிநீர் விநியோகம் துண்டிக்கப்பட்டு, கிராம மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

கமுதி அருகே காவிரி கூட்டுக் குடிநீர் செல்லும் ராட்சத குழாய் சேதமடைந்துள்ளதால், 200-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு குடிநீர் விநியோகம் துண்டிக்கப்பட்டு, கிராம மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
      கமுதியைச் சுற்றியுள்ள கிராமங்களுக்கு காவிரி கூட்டுக் குடிநீர் விநியோகம் செய்யும் வகையில், முதுகுளத்தூர் அருகே கீழக்காஞ்சிரங்குளம் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியிலிருந்து பேரையூர், கருங்குளம் வழியாக ராட்சத குழாய் செல்கிறது. கமுதிக்கு வரும் வழியில் மாங்குடிவிலக்கு சாலையோரமுள்ள இந்தக் குழாய் சேதமடைந்துள்ளதால், குடிநீர் வீணாக விவசாய நிலங்கள், கண்மாயில் தேங்கி நிற்கிறது.     இதனால், கமுதி பகுதியிலுள்ள 200-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு காவிரி கூட்டுக் குடிநீர் விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளது.
     தற்போது, கோடை வெயில் கடுமையாக நிலவுவதால், பொதுமக்கள் பகலில் வெளியே வர அச்சப்படும் நிலையில், தண்ணீர் கிடைக்காமல் பொதுமக்கள் பல கிலோ மீட்டர் தொலைவு அலையும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, சேதமடைந்துள்ள காவிரி கூட்டுக் குடிநீர் ராட்சத குழாயை உடனடியாக சரிசெய்ய மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என, பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com