தை அமாவாசை:  ராமேசுவரம் கோயிலில்  அதிகாலையில் நடை திறப்பு

ராமேசுவரம் ராமநாத சுவாமி திருக்கோயிலில் தை அமாவாசையை முன்னிட்டு ஜன.16 இல் அதிகாலை 2.30 மணிக்கு நடை திறக்கப்படும்.

ராமேசுவரம் ராமநாத சுவாமி திருக்கோயிலில் தை அமாவாசையை முன்னிட்டு ஜன.16 இல் அதிகாலை 2.30 மணிக்கு நடை திறக்கப்படும்.
 இது குறித்து  கோயில் இணை ஆணையர் கோ.செ.மங்கையர்கரசி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: வரும் ஜன.16 ஆம் தேதி (செவ்வாய்கிழமை) தை அமாவாசை வருவதை முன்னிட்டு அன்றைய தினம் அதிகாலை 02.30 மணிக்கு கோயில் நடை திறந்து 3.30 மணி முதல் 4.30 மணி வரையில் ஸ்படிகலிங்க பூஜையும், அதனைத் தொடர்ந்து, காலபூஜைகளும் நடைபெறும். காலை 7 மணிக்கு அக்னி தீர்த்தக் கரைக்கு ஸ்ரீராமர் பஞ்ச மூர்த்திகள் சகிதம் புறப்பாடாகி தீர்த்தவாரி உற்சவம் நடைபெறும். தொடர்ந்து பகல் முழுவதிலும் திருக்கோயில் நடை திறந்திருக்கும். இரவு  8 மணிக்கு ஸ்ரீபஞ்சமூர்த்திகளுடன் வெள்ளி ரதத்தில் ஸ்ரீராமர், புறப்பாடு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com